Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஷ்டவிநாயக் » வானிலை

அஷ்டவிநாயக் வானிலை

குளிர்காலமே அஷ்டவிநாயக் ஆன்மீக யாத்திரைக்கு ஏற்ற பருவ காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் கோடைக்காலம் நிலவும் காலமாகும். இக்காலத்தில் வெப்பநிலை சராசரியாக 36°C முதல் 38°C வரை நிலவுகிறது. கோடையில் இந்த கோயில்களுக்கு யாத்திரை மிகுந்த சிரமத்தையும் அசௌகரியத்தையும் தரக்கூடும். எனவே இப்பருவ காலம் ஆன்மீக யாத்திரைக்கு உகந்ததல்ல.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையில் மழைக்காலம் நிலவுகிறது. கடுமையானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு இக்காலத்தில் காணப்படுகிறது. இது கோடையினால் உண்டான வறட்சியை தணிக்கிறது. இக்காலத்தில் யாத்திரை மேற்கொள்வது விரும்பக்கூடியதாய் இருப்பினும் மழையின் காரணமாக எதிர்பாரா இடைஞ்சல்களை சாலைகள் சுற்றுலாப் போக்குவரத்துக்கு ஏற்படுத்தக்கூடும்.

குளிர்காலம்

டிசம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி வரை குளிர்காலமாகும். இக்காலத்தில் பருவ நிலை மிக விரும்பக்கூடியதாக உள்ளது. குளுமையாக காணப்படும் இப்பருவத்தில் வெப்பநிலை அதிகபட்சம் 30°C ஆகவும் குறைந்தபட்சம் 10°C ஆகவும் உள்ளது.