தபோவனத்தில் இருந்து கால்நடையாக நடந்தே செல்லும் தூரத்தில் பவிஷ்யா பத்ரி அமைந்துள்ளது. இந்த இடம் அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2744 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஐந்து பத்ரிகளில் ஒன்றாகவும் உள்ளது.
பத்ரிநாத், யோக் தியான் பத்ரி, ஆதி பத்ரி மற்றும் விரிதா பத்ரி ஆகியவை பிற பத்ரிகளாகும். உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைப் படி மோசமாக மாறி வரும் சுற்றுச்சூழலால் எதிர்காலத்தில் பத்ரிநாத் கோவிலை அடைய முடியாது.
எனவே, அந்நாட்களில் பத்ரிநாத்திற்குப் பதிலாக பவிஷ்யா பத்ரி வணங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்து கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மரின் உருவம் இந்த கோவிலில் வழிபடப்பட்டு வருகிறது.
தௌலிகங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தபோவனத்தைத் தாண்டி வரும் போது சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications