கடல் மட்டத்திலிருந்து 3056 மீ உயரத்தில் அமைந்துள்ள குர்சோ புக்யால், ஆலியிலிருந்து 3 கிமீ தொலைவிலேயே உள்ளது. இந்த இடம் கோடைக்காலத்திலும் பசுமையைப் போர்த்திக் கொண்டிருக்கும் பசுமையான நிலப்பகுதிகளுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.
இந்த இடம் ஊசியிலை மற்றும் ஓக் மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஜோஸிமாத்தில் இருந்து கயிற்றுப் பாதை வழியாக எளிதில் அடைய முடியும். இந்த இடத்தில் தங்கும் வசதிகள் எதுவும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பகலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு ஆலியில் தங்கிக் கொள்ளலாம்.
குர்சோ பக்யாலில் இருந்து ஒரு கிமீ தொலைவிலேயே உள்ள சட்டர்குந்த் என்ற ஏரியையும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். கிரிஸ்டல் போன்ற தெளிவான மற்றும் சுவையான நீருக்காக இந்த ஏரி புகழ் பெற்றிருக்கிறது.



Click it and Unblock the Notifications