பனிச்சறுக்கு, ஆலி

ஆலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் பிரபலமான சாகச விளையாட்டாக பனிச்சறுக்கு விளங்கி வருகிறது. பனிச்சறுக்கினை முழுமையாக விளையாடி மகிழ மிகவும் ஏற்ற இடங்களாக ஆலியின் பனி படர்ந்த சரிவுகள் உள்ளன.

நோர்டிக் பனிச்சறுக்கு, அல்பைன் பனிச்சறுக்கு மற்றும் டெலிமார்க் பனிச்சறுக்கு ஆகிய பல்வகை பனிச்சறுக்கு வசதிகளை கொண்ட இந்த இடம், உலகிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முதன்மையான பனிச்சறுக்கு விளையாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

சலோம், கிராஸ்-கன்ட்ரி (Cross-Country) மற்றும் கீழ் நோக்கிய பனிச்சறுக்கு ஆகியவற்றையும் பனிச்சறுக்கில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் செய்ய முடியும். 20 கிமீ நீளமுள்ள இந்த சரிவுகளுக்கு சென்று வர கோன்டாலா கேபிள் கார் வசதிகளும் உள்ளன.

பனியை ஒழுங்குபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் ஸ்னோ பீட்டர்களால் இந்த பாதையின் மிதமான தன்மை பராமரிக்கப்பட்டு வருகிறது. நல்ல பசுமையான மரங்கள் நிறைந்த காடுகளுக்கு மத்தியில் இந்த பனிச்சறுக்கு பாதை அமைந்திருப்பது பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

பனிச்சறுக்கு செய்யும் போது காற்றின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு இந்த மரங்களடர்ந்த காடுகள் உதவுகின்றன. கோடைக்காலம் தான் ஆலியின் பனிச்சறுக்கு சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற பருவமாகும்.

ஆலியில் பனிச்சறுக்கு உபகரணங்கள், ஸ்னோ பீட்டர்ஸ் மற்றும் சிறப்பான பனிச்சறுக்கு திட்டங்கள் ஆகியவை பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

தொப்பிகள், காலுறைகள், கம்பளிகள், கையுறைகள், கறுப்பு கண்ணாடிகள், புல் ஓவர்ஸ், காற்றுத்தடுப்பு சட்டைகள், போர்வைகள், கம் பூட்ஸ் மற்றும் டார்ச் லைட் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வர வேண்டியிருக்கும். பனிச் சறுக்கு செய்ய பழகுபவர்களுக்க சிறந்த பயிற்சியிடமாக ஆலி விளங்குகிறது.

Please Wait while comments are loading...