ஆலியில் இருந்து 279 கிமீ தொலைவில் உள்ள டேஹ்ராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் தான் ஆலிக்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆலி செல்வதற்கு டாக்ஸி வசதிகளும் உள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையமான புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து இந்த ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு வர முடியும்.