Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » ஈர்க்கும் இடங்கள் » நாகேஷ்வர்நாத் கோவில்

நாகேஷ்வர்நாத் கோவில், அயோத்யா

20

அயோத்யாவில் உள்ள ராம் கி பைடியில் அமைந்துள்ளது நாகேஷ்வர்நாத் கோவில். இது நாகேஷ்வர்நாத் அல்லது சர்ப்பங்களின் கடவுள் என்றழைக்கப்படும் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலின் மூலக் கடவுளும் அவரே. பன்னிரண்டு ஜோதிலிங்கத்தில் ஒன்று இந்த கோவிலின் கருவறையில் உள்ளது.

ஒரு நாள் ராமபிரானின் இளைய புத்திரன் குசா, சர்யு நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய கையில் கட்டிய ஆபரணம் தவறி தண்ணீரில் விழுந்தது. அதை தேட முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

கடைசியில் சிவபெருமானை வழிபடும் ஒரு சர்ப்பத்தின் மகளான நாக்-கன்யா அதனை கண்டெடுத்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக குசா இந்தக் கோவிலை கட்டினார் என்று புராணம் சொல்கிறது.

சந்திரகுப்தா விக்ரமாதித்யா ஆட்சிக்காலம் வரை இந்தக் கோவில் நல்ல விதமாக பராமரிக்கப்பட்டு வந்தது. நகரத்தின் மற்ற பகுதிகள் அழிந்து விட்டாலும் இந்த கோவில் மட்டும் முழுவதும் அழியாமல் நின்றது.

சஃப்டர் ஜங்கின் மந்திரியான நாவல் ராயால் இந்தக் கோவில் 1750-ஆம் வருடம் புதுபிக்கப்பட்டது. இந்த கோவிலில் சிவராத்திரியின் போது பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது சிவபெருமானின் ஊர்வலமும் நடைபெறும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed