Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » ஈர்க்கும் இடங்கள் » துளசி ஸ்மாரக் பவன்

துளசி ஸ்மாரக் பவன், அயோத்யா

20

துளசி ஸ்மாரக் பவன் 1969-ஆம் வருடம் உத்திர பிரதேச கவர்னர் ஸ்ரீ விஸ்வநாத் தாஸ் ஜி அவர்களின் வலியுறுத்தலால் கட்டப்பட்டது. இது ராமாயணத்தை மீண்டும் ஒரு முறை எழுதிய கவி மற்றும் துறவியுமான கோஸ்வாமி துளசி தாஸின் நினைவாக எழுப்பப்பட்டது.

இந்த பவனம் ராஜ்கங் கிராசிங்கில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கி 300 அடியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் துறவி துளசி தாஸ் ராமாயணத்தை எழுதினர் என்று நம்பப்படுகிறது.

இந்த இடத்தில் அயோத்யா ஷோத் சன்ஸ்தான் என்ற ஒரு ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனுள் உள்ள ஒரு பெரிய நூலகத்தில் மதிப்பிட முடியாத பல அறிய வகை புத்தகங்கள் உள்ளன. அவை புலவர்களுக்கும் வரலாற்று நிபுணர்களுக்கும் பொக்கிஷமாக திகழும்.

இங்கே ராம் கதா சங்கராலையா என்ற அருங்காட்சியம் ஒன்று 1988-ஆம் வருடம் நிறுவப்பட்டது. இங்கே ஸ்ரீ ராமருக்கு சம்மந்தப்பட்ட தொல்பொருட்களை சேகரித்து, அதை பாதுகாத்து, பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படுகின்றன.

இது ஒரு பண்பாட்டு மையம் என்றும் மார் தட்டிக் கொள்கிறது. இங்கே ராம் லீலா கலை நிகழ்ச்சி  2004, மே 20 ஆம் தேதியிலிருந்து தினசரி சாயங்காலம் 6 மணி முதல் 9 மணி வரை நடை பெற்று வருகிறது.

மேலும் இங்கே வழிபாடுகள், சமயஞ்சார்ந்த உரையாடல்கள், சமய விரிவுரைகள், பக்தி பாடல்கள், இசைகள், கீர்த்தனைகள் ஆகியவைகள் நடைபெறும். இது போக ஒவ்வொரு வருடமும் சரவண மாதம் 7-ஆம் நாள் துளசி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu