Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாந்தவ்கார் » வானிலை

பாந்தவ்கார் வானிலை

பாந்தவ்காரை பார்க்க குளிர் காலமே சிறந்த பருவம் ஆகும்.  அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இனிய பருவமானது மார்ச் வரை நீடிக்கிறது. இந்த பருவத்தில் வானிலை மிதமான குளிருடன் இதமாக இருக்கும். மேலும், நீங்கள் எந்தவித  தடையும் இல்லாமல் இந்த பருவத்தில் பூங்கா மற்றும் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்க்க முடியும். 

கோடைகாலம்

இங்கு மார்ச் மாதம் தொடங்கும் கோடை காலம் ஜூன் வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் இங்கு கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. அது சுமார் 40 டிகிரி  செல்சியஸ் வரை செல்கிறது. ஏப்ரல் மாத மத்தியில் இருந்து ஜூன் மாத  இறுதி வரை இந்த  இடத்தில் வெப்ப அலைகள் மற்றும் கடினமான வறட்சி ஏற்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் பாந்தவ்காருக்கு  பயணம் செய்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

மிகுந்த வெப்பமான கோடைகாலத்திற்கு  பின்னர்  இங்கு ஜூலை மாதத்தில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது. இந்த இடம் விந்தியா மலையின் எல்லையில் அமைந்துள்ளதால் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. எனவே பாந்தவ்கார் தேசிய பூங்கா  இந்த பருவத்தில் மூடப்பட்டு விடும். ஆகவே இந்த பருவத்தில் இங்கு வருவது நல்லதல்ல.

குளிர்காலம்

அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை வானிலை இனிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.  நீங்கள் இந்த பருவத்தில் நீர் நிரம்பிய மரங்களடர்ந்த பகுதியைச் சுற்றி பசுமையை காண்பீர்கள்.  பொதுவாக இங்கு குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மூன்று மாதங்கள் நீடிக்கிறது. இந்த பருவத்தில் வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ்ற்கு கீழேயே இருக்கும்.