பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 181 கி.மீ தூரத்தில் உதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து முக்கிய டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜெய்ப்பூர் சங்கனேர் விமான நிலையங்களுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்சிகள் மூலம் பன்ஸ்வாரா நகரத்தை வந்தடையலாம்.