Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரமுல்லா » வானிலை

பரமுல்லா வானிலை

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் கோடை காலத்தில் இந்த பரமுல்லா பகுதிக்கு சுற்றுலா செல்வது நன்றாக இருக்கும்.

கோடைகாலம்

கோடை காலத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பரமுல்லா மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிர செல்சியசாகவும் பதிவாகும். இந்த காலத்தில் பரமுல்லா பகுதிக்கு சுற்றுலா வந்தால் மிகவும் இனிமையாக இருக்கும்.

மழைக்காலம்

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக் காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் சுமாரான மழை அளவு இருக்கும். ஆனால் எப்போது மழை வரும் என்று தெரியாது. எனவே இந்த காலத்தில் பரமுல்லா பகுதிக்கு சுற்றுலா செல்வது அவ்வளவு இனிமையாக இருக்காது.

குளிர்காலம்

பரமுல்லா மாவட்டத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது. குளிர் காலத்தில் இங்கு குளிர் மிகவும் கடுமையாக இருக்கும். அதாவது இந்த காலத்தில் இந்த பகுதியில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக -14 டிகிர வெப்பமும், அதோடு பனிப் பொழிவும் அதிகம் இருக்கும். பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், குளிர் காலத்தில் பரமுல்லா பகுதிக்கு செல்லலாம்.