அஹ்மத் புல் அல்லது அஹ்மத் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் இந்த பாலம் பஸ்தி நகரத்தின் புறநகர்ப்பகுதியில் குவானோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. ஆங்கில ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்த பாலம் பஸ்தி நகரத்தை அயோத்யா, ஃபைஸாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
குவானோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு மடாலயத்தின் பெயராலேயே இந்த பாலம் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பாலத்துக்கு அருகிலேயே ஒரு சிவன் கோயிலும் உள்ளது.
இரைச்சல் நிரம்பிய நகரச்சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக நிசப்தம் தவழும் இதமான சூழலுடன் இந்த இடம காட்சியளிக்கின்றது.
கரையோரம் அமைந்துள்ள ஆன்மீக அம்சங்கள் இப்பகுதியின் அமைதியை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன. காலை நேரங்களில் ஆற்றங்கரையில் உள்ள மடாலயத்தில் விசேஷ யோகா பயிற்சிகளை முடித்துவிட்டு திரும்புபவர்களை காண முடியும்.



Click it and Unblock the Notifications