பாடெஷ்வர் நாத் என்பது ஒரு சிறிய கிராமமாகும். இது பஸ்தி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் பிராம்மணர்கள் மற்றும் கோஸ்வாமி இனத்தார் வசிக்கின்றனர்.
மக்கள் தொகையும் 500 என்ற அளவில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டுள்ளது. இருப்பினும் இங்கு பாடெஷ்வர் நாத் எனும் முக்கியமான கோயில் அமைந்திருப்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுவிட்டது.
பாடெஷ்வர் நாத் கோயில் ஒரு சிவன் கோயிலாகும். இது தீவிர சிவபக்தனாக விளங்கிய ராவணனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
குவானா ஆற்றின் கரையில் கம்பெனி பாக் சௌராஹா கிராஸிங் எனும் இடத்திலிருந்து 4 கி.மீ தூரத்திலும், பஸ்தி ரயில் நிலையத்திலிருந்து தோராயமாக 12 கி.மீ தூரத்திலும் இந்த கோயில் உள்ளது.
இந்த கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கம் பற்றிய குறிப்பு சிவ மஹா புராணத்திலும் இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி திருநாளின்போது இங்கு ஒரு சந்தையும் நடைபெறுகிறது. வெகு தூரங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த திருவிழாச்சந்தையில் கலந்து கொள்வதற்காக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications