பஸ்தி நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும், கர்மியா எனும் கிராமத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலும் இந்த சாவாணி பஜார் அமைந்திருக்கிறது. 1850ம் ஆண்டுகளில் ஆங்கிலேய ஆட்சியின்போது ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியாக இது ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1857ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப்புரட்சியின் போது இந்த இடத்தில்தான் ஜெனரல் ஃபோர்ட் எனும் ஆங்கிலேய தளபதி கொல்லப்பட்டார்.
இந்த பஜாரில் அமைந்துள்ள ஒரு பீபால் மரமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. தங்கள் தளபதி கொல்லப்பட்டதல் ஆத்திரமடைந்த ஆங்கிலப்படையினர் 250 சுதந்திர போராட்ட வீரர்களை இந்த பீபால் மரத்தில்தான் தூக்கில் இட்டுள்ளனர்.
இந்த வரலாற்றுச்சம்பவத்தின் காரணமாக இந்த சாவாணி பஜார் பகுதி சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட நினைவு ஸ்தலமாக பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications