நகர் எனும் சொல் நகரப்பகுதியை குறிப்பதாக இருந்த போதிலும், இந்த நகர் பஜார் என்பது பஸ்தி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும். பஸ்தி நகரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. கணேஷ்பூருக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் இரண்டாவது பெரிய பஞ்சாயத்து அமைப்பாக இது விளங்குகிறது.
ஒரு குன்று போன்ற மேட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிராமம் கௌதம புத்தர் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. இது வரலாற்று நிபுணர்களால் புறக்கணிக்கப்படும் தகவலாக இருந்தபோதிலும் இந்த இடம் தொல்லியம் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாகவே காட்சியளிக்கிறது.
இங்கு ஒரு கோட்டையின் இடிபாடுகளை பார்க்க முடிகிறது. இது 14ம் நூற்றாண்டில் கௌத ராஜ வம்சத்தினர் வசித்த கோட்டையாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த இடிபாட்டு ஸ்தலத்திலேயே ராஜ்கோட் எனும் கோயிலும் காணப்படுகிறது. சந்தோ தல் எனும் ஏரியும் இந்த கிராமப்பகுதிக்கு மேற்கே அமைந்திருக்கிறது. இந்த ஏரிப்பகுதியும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications