கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில், மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது.
இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான இது, ஒற்றைப் பாரையில் இருந்து வடிவமைக்கப்பட்டதாகும். சுமார் 7.5 அடி உயரமும், 17.8 அடி சுற்றளவும் கொண்ட அழகிய சிவலிங்கத்தின் சிறப்பை பெற்றதனால் இதனை கிழக்கு சோம்னாத் என்று அழைக்கின்றனர்.
11,12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டமைப்பை கொண்டதாக விளங்குகிறது போஜேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தொன்மையான இந்தியாவின், அதிசயமாக திகழ்ந்திருக்குமாம்.
போஜேஷ்வரர் கோவிலின் எழில்மிகு மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகள், பாதைகள் மற்றும் சிற்பங்கள் காண்பவரை அதிசயப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
அழகிய தூண்கள் மாடிக்குச் செல்லும் வழியைத் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கிறது. வெளிப்புற சுவர்கள் மற்றும் அது தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படாமலே இருக்கிறது.
கோவிலை மண்டபத்தோடு சரி சமமாக உயர்த்த பயன்படுத்தப்பட்ட மணற்கற்களால் ஆன வளைவுகள் இன்றளவும் அங்கே காணப்படுகின்றன. இது நம் தொன்மையான கட்டிடக்கலை திறமைகளை பறைசாற்றும் ஆவணங்களாக திகழ்கின்றன.



Click it and Unblock the Notifications