நிச்சலனமான மர்மத்தோடு தோற்றமளிக்கும் இந்த கருமலைகள் காவ்தாவின் வடக்குப்புறத்தில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. கட்ச் பகுதியின் மிக உயரமான இடமான இது, கட்ச்சின் க்ரேட் ரான் பகுதியின் அழகை ஒரு பறவையின் பார்வையில் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போன்றதொரு காட்சியை வழங்குகிறது.
இங்கு அமைந்திருக்கும் 400 வருடப் பழமை வாய்ந்த தத்தாத்ரேயா கோயில் ஒரு சிறந்த சுற்றுலா ஈர்ப்பாகும். ஆனால் பொது போக்குவரத்து சேவைகளின் மூலம் இங்கு செல்வது கடினம்; ஏனெனில், வாரயிறுதிகளில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே காவ்தாவிலிருந்து காலோ துங்காருக்கு இயக்கப்படுகிறது.
ஆனால், வாடகை ஜீப்கள் மூலம் இந்த மலையை அடையலாம். புராணங்களின் படி, தத்தாத்ரேயா பூமிக்கு வந்த போது, பசியால் வாடிக்கொண்டிருந்த சில குள்ளநரிகளைக் கண்டார்.
அந்த விலங்குகளின் தவிப்பைக் கண்டு மனமிரங்கிய அவர், தன்னையே அவற்றிற்கு உணவாக அளித்தார். ஆனால், அவை சாப்பிட்ட பின்னும், அவரது உடற்பாகங்கள் மீண்டும் மீண்டும் புதிதாகத் தோன்றிக் கொண்டே இருந்த்தாகக் கூறப்படுகிறது.
அதனால், இன்றளவும் இக்கோயில் பூசாரி, ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பூஜை முடிந்த பின் ஒரு குள்ளநரிக் கூட்டத்துக்கு சாதத்தை படைத்து அவற்றின் பசியாற்றுகிறார்.
இம்மலைகள் பாகிஸ்தானின் எல்லைக்கு மிக அருகில் அமைந்திருப்பதனால் இங்கு ஒரு இராணுவப் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ நபர்கள் மட்டுமே இதற்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.



Click it and Unblock the Notifications