Search
  • Follow NativePlanet
Share

கோண்டல் - விண்டேஜ் கார்களை கொண்ட ராஜ நகரம்!

19

இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள் மீது அதிக ஈர்ப்புடன் இருந்தனர். அதனால் அந்த நேரத்தில் குஜராத்தில் இந்த இடத்தில் நல்ல சாலை இடப்பட்டிருந்தன. கி.பி.1643-ஆம் ஆண்டு தாக்கோர் ஸ்ரீ கும்போஜி இ மேரமாஞ்சியால் கோண்டல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் வந்த ஸ்ரீ பகவத் சிங்ஜி கோண்டலை இந்தியா சுதந்திரம் பெரும் வரை ஆட்சி செய்தார்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள அரண்மனையை அவரது மகனான யுவராஜ் போஜ்ராஜி கட்டினார். தற்போது அது ஹெரிடேஜ் ஹோட்டலாக உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த பர்நிச்சர்கள், விளக்குகள் மற்றும் பிற சோடினைகளை பார்ப்பதற்கு கண் கொள்ள காட்சியாக இருக்கும்.

இங்குள்ள அரச குடும்பம் எப்போதுமே விண்டேஜ் கார்களின் மீது பற்றுடன் இருந்தனர். அவர்கள் கார்களின் திரட்டல் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி பொருளாக திகழ்கிறது. 17-ஆம் நூற்றாண்டு கட்டட அமைப்பை பெற்ற மற்றொரு அரண்மனையான நவ்லாக்ஹா அரண்மனை இங்குள்ளது.

இதை கட்டி முடிக்க 9 லட்சம் செலவானதால் இது அப்பெயரை பெற்றது.  இதனுள் கற்களில் செய்யப்பட்ட அற்புதமான சிற்பங்கள், மேல் மாடங்கள்கள் (ஜாரோகாஸ்), செதுக்கப்பட்ட வளைவுகள் மற்றும் சுழல் படிகட்டுகளை காணலாம்.

தற்போது அரச குடும்பம் வசிக்கும் ஹுசூர் அரண்மனை முழுவதும் பழமையான பர்நிச்சர்கள், ஓவியங்கள், தோப்புகள் மற்றும் தோட்டங்களுடன் நிறைந்து இருக்கிறது. ஸ்வாமிநாராயண் சம்பிரடேவுக்கு கோண்டலில் அக்ஷர் மந்திர் என்ற ஒரு கோவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இங்கு குணாதித்தானந்த் சுவாமியின் சமாதி ஒன்றும் அமைந்துள்ளது. சுரேஷ்வர் மகாதேவ் கோவில், தரேஷ்வர் மகாதேவ் கோவில் மற்றும் புவனேஸ்வரி மந்திர் ஆகியவைகள் கோண்டலிலுள்ள முக்கியமான சமயஞ்சார்ந்த இடங்களாகும்.

கோண்டல் சிறப்பு

கோண்டல் வானிலை

சிறந்த காலநிலை கோண்டல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கோண்டல்

  • சாலை வழியாக
    கோண்டல் ராஜ்கோட்டிற்கு அருகில் இருப்பதால், சாலை வழியாக குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கு இணைப்பில் உள்ளது. ராஜ்கோட்டிலிருந்து அதன் அருகில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பல மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இரயில் மூலன் கோண்டல் வர வேண்டுமென்றால் அதன் அருகில் உள்ள ராஜ்கோட் இரயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். இது அகமதாபாத்-ஹப்பா அகல பாதை உள்ள மேற்கு இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. ராஜ்கோட்டிலிருந்து முக்கிய நகரங்களான மும்பை, கோயம்புத்தூர், டெல்லி, அம்ரித்சர், போபால், கொல்கத்தா மற்றும் கொச்சினுக்கு இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராஜ்கோட்டில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து மும்பைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து கோண்டலுக்கு பேருந்துகள் அல்லது ஆட்டோக்கள் மூலம் வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu