Search
 • Follow NativePlanet
Share

மாண்ட்வி - மனதை கட்டிப்போடும் இடம்!

19

மாண்ட்வி, குஜராத்திலுள்ள குட்ச் நகரத்தின் முக்கிய துறைமுகமாக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் மும்பை மற்றும் சூரத் துறைமுகம் உண்டாவதற்கு முன்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும். கிழக்கு ஆப்ரிக்கா, பெர்சியன் கல்ஃப், மலபார் கோஸ்ட் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் கப்பல்கள் அரேபியன் பெருங்கடலில் இருக்கும் இந்த துறைமுகத்திற்கு வரும்.

துறைமுக நகரத்தின் முக்கியத்துவம்

1574-ஆம் ஆண்டு கட்ச்சின் அரசராக விளங்கிய கென்கர்ஜி என்பவர் தான் மாண்ட்வியை துறைமுக நகரமாக கண்டுபிடித்தார். குஜராத்தின் முக்கிய துறைமுகமாக இது விளங்குவதால் இந்நகரம் வெகு விரைவிலேயே செழுமை அடைந்தது.

குறைந்த காலத்திலேயே மாண்ட்வியிலுள்ள சுந்தர்வர் கோவில், ஜம்மா மஸ்ஜித், லக்ஷ்மிநாராயன் கோவில், காஜிவலி மசூதி மற்றும் ராமேஷ்வர் கோவில் கட்டப்பட்டது.

முக்கிய துறைமுகமாக விளங்கியதால், இந்த கப்பற்படைத் தொகுதியில் இருந்து 400 கப்பல்கள் இங்கிலாந்து வரை சென்று திரும்பின. இந்த துறைமுகம் 8 அடி உயர, பல வாசல்கள் மற்றும் 25 முகப்புகள் கொண்டுள்ள ஒரு கோட்டையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கோட்டை சுவர்கள் அழிந்த நிலையில் உள்ளது. இருப்பினும் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மிகப் பெரிய முகப்பு இன்று கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

அதி நவீன கப்பல்கள் இங்கே நிறுத்த முடியாததால், துறைமுகமாக பெற்ற முக்கியத்துவத்தை இந்த நகரம் இழக்கத் தொடங்கியது. ஆனால் இன்னும் ருக்மாவதி ஆற்றங்கரையில் பழங்கால கப்பல் கட்டும் வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மக்களும், பண்பாடும்!

மாண்ட்வியின் பண்பாடு கட்ச்சின் அசல் பண்பாட்டை பிரதிபலிக்கும். வணிகர்களும் மீனவர்களும் தான் இங்கு அதிகமாக குடி கொண்டிருக்கிறார்கள்.உள்ளூரில் தயார் செய்யப்படும் இரட்டை ரொட்டி எனப்படும் டபேலி என்ற உணவிற்கு புகழ் பெற்றதாகும் மாண்ட்வி. 1960-ல் கேஷவ்ஜி கப்பா சுடசாமா என்பவரால் இந்த உணவு வகை கண்டுபிடிக்கப்பட்டது.

ஈர்ப்புகள்

400 வருடங்களாக மாண்ட்வியில் கப்பல் கட்டும் பணி தான் பிரதான தொழிலாக விளங்குகிறது. ருக்மாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கப்பல் கட்டும் வெளிமுற்றத்தில் மரத்தினால் செய்யப்பட்ட பல கப்பல்களை காணலாம்.

இங்குள்ள மற்றொரு இடமான டவர் ஃஆப் வேகர்ஸ் என்ற இடத்தில் தான் கப்பல் முதலாளிகள் தங்களின் வணிக கப்பல்கள் திரும்பி வரும் வேளை  அடி வானத்தின் அளவு குறியீடை சோதனை செய்வர்.

இந்த நகரம் பல அமைதியான மற்றும் சுத்தமான கடற்கரைக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த கடற்கரையில் ப்லம்மிங்கோ போன்ற இடம் பெயரும் பறவைகள் தங்கள் பயணத்தில் ஓய்வு எடுக்க இங்கே தங்கும்.

மாண்ட்வியில் சிறந்த கட்டடக் கலையின் சின்னமாக விளங்குகிறது விஜய் விலாஸ் அரண்மனை. இது 1929-ஆம் ஆண்டு ராவ் விஜய்ரஜ்ஜியால் கட்டப்பட்டதாகும்.

இது புஜ்ஜின் பிரிட்டிஷ் உயர் ஆணையரின் கோடை கால வீடாக விளங்கியது. வெள்ளையர்கள் இதனை அதிகமாக பயன்படுத்தியதற்கு இங்குள்ள கல்லறை தோட்டமே சாட்சியாக விளங்குகிறது.

கப்பல் கட்டும் தொழில், பண்பாட்டு வரலாறு, கடற்கரைகள் ஆகியவை கண்டிப்பாக மாண்ட்வியை மறக்கச் செய்யாது.

மாண்ட்வி சிறப்பு

மாண்ட்வி வானிலை

சிறந்த காலநிலை மாண்ட்வி

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது மாண்ட்வி

 • சாலை வழியாக
  தனியார் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோகள் தான் உள்ளூர் போக்குவரத்துகளாக விளங்குகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  175 கி.மீ. தொலைவில் சூரத்திலுள்ள மதி இரயில் நிலையம் தான் மாண்ட்விக்கு மிக அருகாமையில் இருக்கும் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையத்திலிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  மாண்ட்விக்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் சூரத்தில் 166 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருது மாண்ட்வியை இந்தியாவிலுள்ள பல இடங்களுடன் இணைக்கிறது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 May,Tue
Return On
25 May,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
24 May,Tue
Check Out
25 May,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
24 May,Tue
Return On
25 May,Wed