Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாண்ட்வி » வானிலை

மாண்ட்வி வானிலை

கோடைகாலம்

மாண்ட்வி பொதுவாகவே வெப்பத்துடன் இருந்தாலும் கோடைக்காலத்தில் இதமான வானிலையுடன் நிலவும். மாண்ட்வியில்  கோடைக்காலம் மார்ச் கடைசியில் ஆரம்பித்து ஜூன் வரை நீடிக்கும். இந்த காலத்தில் தட்ப வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் அல்லது 71.6 டிகிரி பாரன்ஹீட் முதல் 38 டிகிரி செல்சியஸ் அல்லது 101 டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.

மழைக்காலம்

மாண்ட்வியில் பருவக்காலம் ஜூன் கடைசியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். சமுத்திரத்தின் காற்று இந்த இடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். சராசரியாக 356 மி.மீ. அல்லது 14 இன்ச் வரை மழை பதிவாகியுள்ளது. அதே போல் தட்ப வெப்ப வானிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

குளிர்காலம்

குளிர் காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த காலத்தில் குறைந்தபட்ச வானிலை 12 டிகிரி செல்சியஸ் அல்லது 53.6 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். அதே போல் அதிகப்பட்ச வானிலை 30 டிகிரி செல்சியஸ் அல்லது 86 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும்.