Search
 • Follow NativePlanet
Share

ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!

38

முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்களும் மற்றும் ராஜ்கோட் மக்களின் உபசரிப்பும் நிறைந்த சுற்றுலாத்தலமாக இருப்பதால் இந்நகரம் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

ராஜ்கோட் நகரத்தின் வரலாறு

ஜாம்நகரைச் சேர்ந்த அரச குடும்ப வாரிசான தாக்கோர் சாஹிப் விபோஜி அஜோஜி ஜடோஜா என்பவர், கி.பி.1620-ம் ஆண்டு இந்நகரத்தை உருவாக்கினார். இதற்கு துணை நின்றவரான ராஜு சாந்தி என்பவரின் பெயரால் இந்நகரம் ராஜ்கோட் என்று பெயர் பெற்றது.

முகலாய பேரரசர் குஜராத்தில் மீண்டும் காலூன்றுவதற்கு உதவி செய்ததன் பலனாக தாகோர் சாஹிப்பிற்கு இந்த நிலப்பகுதிகள் பரிசாக வழங்கப்பட்டன. அதன் பின், உள்ளூர் கத்தி பழங்குடியினர் மற்றும் ஜுனாகத் அரசருடன் போரிட்டு தனது நிலையை இவர் பலப்படுத்திக் கொண்டார்.

நவாப்பின் ஆட்சியில் ராஜ்கோட்

ஜுனாகத் அரசரின் அலுவலராக இருந்த மசூம் கான் என்பவர் கி.பி.1720-ல் ராஜ்கோட் நகரத்தைக் கைப்பற்றினார். 1722-ம் ஆண்டில் இந்நகரத்தை மசூமாபாத் என்று பெயர் மாற்றம் செய்தார்.

8 அடி உயரமுள்ள கனமான சுவற்றில் 8 கதவுகளுடன் உயரமான இரும்புக் கிராதிகளை கொண்ட பாதுகாப்பு அரணுடன் இந்நகரம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. எட்டாவது கதவான காட்கி நாகாவில் நாக்லாங்க் கோவில் உள்ளதால் அங்கு மட்டும் கூரான ஈட்டி போன்ற முனைகள் இல்லாமல் அரண் அமைக்கப்பட்டுள்ளது.

பேடி நாகா மற்றும் ராய்கா நாகா என்ற இரண்டு வாயில்கள் மட்டுமே, பிரிட்டிஷாரால் புனரமைக்கப்பட்டு மூன்றடுக்கு கடிகார கோபுரங்களாக இன்றளவிலும் நிலைபெற்று நிற்கின்றன.

ஆங்கிலேயர்களுடன் தொடர்பு

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ராஜ்கோட் நகரம் கலை, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் வளர்ச்சி பெற்றது. அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் ராஜ்குமார் கல்லூரி, வாட்சன் அருங்காட்சியகம், லாங் நூலகம், கன்னாட் ஹால் மற்றும் மேஸ்திரிகள் சந்திப்பதற்காக கட்டப்பட்ட முதல் இடமான மேஸன்ஸ் லாட்ஜ் ஆகிய இடங்கள் கட்டப்பட்டன.

மிகச்சிறந்த கல்வி மையமாகவும் விளங்கிய ராஜ்கோட், இந்திய சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய பல்வேறு அறிவுஜீவிகளை உருவாக்கிய இடமாகவும் இருந்திருக்கிறது.

காந்திஜியும், ராஜ்கோட் நகரமும்

இன்று காந்தி வித்யாலயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஆல்ப்ரட் உயர் நிலைப் பள்ளியில் தான் காந்திஜி தனது தொடக்ககால கல்வியைக் கற்றார். பின்னர், அவர் ராஷ்டிரரியசாலா என்ற அமைப்பை உருவாக்கி கதர் பயன்பாட்டின் மூலம் சுதேச இயக்கத்தை பரப்பவும் செய்தார்.

கலாச்சாரம்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வந்து குடியேறியவர்கள் உள்ளதால் பல்வேறு கலாச்சாரங்கள் பயன்படுத்தப்படும் நகரமாக ராஜ்கோட் உள்ளது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், மகிழ்ச்சியுடன் இருக்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் ராஜ்கோட் மக்களை இந்த கலவையிலும் தனித்து அடையாளம் காண முடியும்.

இந்த குணத்திற்காகவே, அவர்கள் 'ரங்கிலோ ராஜ்கோட்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். சுறுசுறுப்பான இந்த மக்கள் தங்களுடைய கத்தியவாரி உபசரிப்புக்காக பெயர் பெற்றவர்களாவர்.

இங்கிருக்கும் மக்களில் பெரும்பாலோர் சைவ உணவை உண்பவர்களாவர். இங்கிருக்கும் பெண்கள் தங்களை பல்வேறு வகைகளான நகைகளால் மிகவும் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வது வழக்கம்.

புவியியலும், பருவநிலையும்

ஆஜி மற்றும் நிராரி நதிகளின் கரையில் அமைந்துள்ள ராஜ்கோட் நகரத்தில் வெப்பம் மற்றும் வறட்சி மிகுந்த கோடைக்காலமும், கனமழை பெய்யும் மழைக்காலமும் நிலவி வருகிறது. மழைக்காலங்களில் அரபிக் கடலில் உருவாகும் புயல் தாக்குதல்களுக்குப் பெயர் பெற்ற இடியேறும் இடமாகவும் ராஜ்கோட் உள்ளது.

மக்கள்

ராஜ்கோட் நகரத்தின் கல்வி சராசரி 80.6%. 10% மட்டுமே முஸ்லிம்கள் உள்ள இந்நகரத்தின், பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாவர்.

ராஜ்கோட்டில் பார்வையிட வேண்டிய இடங்கள்

வாட்சன் அருங்காட்சியகம், லாங் நூலகம், கன்னாட் ஹால், ராஜ்குமார் கல்லூரி, காபா காந்தி நோ டெலோ, ராஷ்டிரியசாலா, கம்பாலிடா குகைகள், வீர்பூர், தாங்கரா ஆகியவை ராஜ்கோட்டில் காண வேண்டிய சில முக்கிய பார்வையிடங்களாகும். ராம்பாரா வனவிலங்குகள் சரணாலயம், டாஸ்டா மற்றும் பஜனா ஆகியவையும் பார்த்து அனுபவிக்க வேண்டிய இயற்கை பூங்காக்களாகும். ஜெட்பூர், பங்டி பஜார் ஆகிய இடங்களில் உங்களுக்கு முழுவதும் வித்தியாசாமான அனுபவங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

ராஜ்கோட் நகரத்தவர்களின் கத்தியவாரி உபசரிப்பை அனுபவிக்க விரும்புபவர்களும், இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருந்ததற்காகவும் ராஜ்கோட் நகரத்திற்கு சுற்றுலா வருவது மிகவும் அவசியமான ஒரு பயணமாகவே இருக்கும்.

போக்குவரத்து தொடர்புகள்

ராஜ்கோட் நகரத்தின் சாலைப் போக்குவரத்து குஜராத் மாநில நெடுங்சாலைகளில் எளிதில் நடந்து வரும் விஷயமாகும். ராஜ்கோட் நகரத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு குஜராத் மாநில அரசு சாலை போக்குவரத்து கழகம் (Gujarat Stare Road Transport Corporation) தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கி வருகிறது.

ராஜ்கோட் நகரத்தின் உள்ளூர் போக்குவரத்து வசதிகளை ராஜ்கோட் நகராட்சி கழகம் (Rajkot Municipal Corporation) மேற்கொண்டு செய்து வருகிறது. பேருந்துகள் மட்டுமல்லாமல் உள்ளூர் போக்குவரத்திற்கு உறுதுணை செய்ய ஆட்டோக்களும் இங்கு உண்டு.

இந்த பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் CNG வாயுவையே எரிபொருளாக பயன்படுத்துகின்றன. ராஜ்கோட் நகரத்தின் மையத்தில் ஒரு சிறிய விமான தளமும் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து அகமதாபாத், மும்பை, பாவ்நகர் மற்றும் சூரத் போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

குஜராத் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் குஜராத் மாநில அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் ஆகியவற்றால் ராஜ்கோட் நகரம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பேருந்துகளும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சென்று வருகின்றன. ராஜ்கோட் நகராட்சி கழகமும் CNG வாயுவால் இயங்கும் பேருந்துகளை நகரத்திற்குள் இயக்கி வருகிறது.

ராஜ்கோட் சிறப்பு

ராஜ்கோட் வானிலை

சிறந்த காலநிலை ராஜ்கோட்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ராஜ்கோட்

 • சாலை வழியாக
  குஜராத் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் குஜராத் மாநில அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் ஆகியவற்றால் ராஜ்கோட் நகரம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பேருந்துகளும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சென்று வருகின்றன. ராஜ்கோட் நகராட்சி கழகமும் CNG வாயுவால் இயங்கும் பேருந்துகளை நகரத்திற்குள் இயக்கி வருகிறது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  ராஜ்கோட் நகரத்தின் இரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இரயில்கள் சென்று வருகின்றன. இம்மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பேசஞ்சர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் ராஜ்கோட் இரயில் நிலையத்திலிருந்து இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  ராஜ்கோட் நகரத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்திலேயே அமைந்திருக்கும் ராஜ்கோட் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் குஜராத்தின் பிற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் தங்களுடைய விமானங்களை தொடர்ச்சியாக மும்பைக்கு இயக்கி வருகின்றன. அகமதாபாத் மற்றும் பாவ்நகருக்கும் அவ்வப்பொழுது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜெட் ஏர்லைன்ஸின் விமானங்கள் பெங்களூரிலிருந்து ராஜ்கோட்டிற்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jul,Fri
Return On
02 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
01 Jul,Fri
Check Out
02 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
01 Jul,Fri
Return On
02 Jul,Sat