Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » வானிலை

ராஜ்கோட் வானிலை

ராஜ்கோட் நகரத்திற்கு கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தில் வந்து செல்வது சற்றே அசௌகரியமான பயணமாகவே இருக்கும். எனவே மகிழ்ச்சிகரமான மற்றும் சற்றே குறைவான வெப்பத்தைக் கொண்டிருக்கும் குளிர்காலத்தில் இந்நகரத்திற்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

ராஜ்கோட்டின் கோடைக்காலம் வழக்கமாகவே வெப்பமாகவும் மற்றும் வறட்சியாகவும் இருக்கும். மார்ச் மாதத்தின் மத்தியில் தொடங்கி, ஜுன் மாதத்தின் மத்தியில் முடியும் கோடைக்காலத்தில் ராஜ்கோட்டின் வெப்பநிலை 24°C அல்லது 75°F முதல் 42°C அல்லது 108°F வரையிலும் இருக்கும்.

மழைக்காலம்

இடிமின்னல்களும், அரபிக்கடலின் புயலும் மையம் கொண்டிருக்கும் மழைக்காலம், ராஜ்கோட் சுற்றுலாவிற்கு ஏற்ற பருவம் கிடையாது. அரபிக்கடலுக்கு மிகவும் அருகில் இருப்பதால் அதிக மழையும், அதிக காற்றும் வீசும் இடமாகவும் இந்நகரம் மழைக்காலத்தில் இருக்கும். ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இடிமின்னல்கள் சாதாரண அனுபவமாக இருந்தாலும், மழைக்காலத்திற்குப் பின்னர் பெய்யும் மழையை விட குறைவான மழையே இந்நாட்களில் பொழியும். இந்நாட்களில் ராஜ்கோட்டின் வெப்பநிலை 20°C அல்லது 68°F முதல் 37°C அல்லது 99°F வரையிலும் இருக்கும்.

குளிர்காலம்

ராஜ்கோட்டின் குளிர்காலம் சற்றே ஈரப்பதமானதாக இருக்கும். இந்நாட்களில் ராஜ்கோட்டின் வெப்பநிலை 10°C அல்லது 50°F முதல் 22°C அல்லது 72°F வரையிலும் இருக்கும்.