கேதா - பழமையும், வளமையும்!

முன்னொரு காலத்தில் "ஹிடிம்ப வான்" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி அரசாட்சியால் ஆளப்பட்டு வந்த கேதா பின்னர் மராத்தியர்களால் கையகப்படுத்தப்பட்டது.

பின்னர் வெள்ளையர்களால் ஆட்சி செய்யப்பட்டது. காந்திஜி இங்கிருந்தே தன் சத்யக்ரஹாவை ஆரம்பித்ததால் இந்த இடத்துக்கு வரலாற்று முக்கியத்துவமும் அடங்கியுள்ளது.

கேதா பஞ்சத்தில் வாடிய போது கூட வெள்ளையர்கள் இந்த கிராம மக்களுக்கு வரி விலக்கு அளிக்கவில்லை. இதனால் தான் காந்திஜி தன் முதல் சத்யக்ரஹா போராட்டத்தை தொடங்கினார்.

இந்த போராட்டத்தின் முடிவில் வெள்ளையர்கள் தங்கள் பிடிவாதத்தை நிவர்த்தி செய்து, இரண்டு வருடங்களுக்கு வரி விலக்கு அளித்தனர். மேலும் வட்டி விகிதத்தையும் குறைத்தனர்.

ஹனுமான் டெக்ரோவிலுள்ள கேதியா ஹனுமான் கோவில், ஸ்ரீ மகாலட்சுமி கோவில், ஸ்ரீ மன்கமேஷ்வர் கோவில், ஸ்ரீ ஹனுமான்ஜி கோவில், பஹுகாராஜி மந்திர், ஸ்ரீ சோம்நாத் கோவில், ராம்ஜி மந்திர், பத்ரகாளி கோவில், ஸ்ரீ மெல்டி மாதாஜி கோவில், ஸ்ரீ நில்காந்த் மகாதேவ் கோவில், டாகோரிலுள்ள  ராஞ்சோட்ரை கோவில், ஸ்ரீ கோதியார் மந்திர், நாடியாதிலுள்ள சாந்த்ராம் மந்திர் போன்றவைகள் தான் கேதா மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள முக்கியமான சமயஞ்சார்ந்த ஸ்தலங்கள்.

கேதாவில் உள்ள சில கோவில்களிலும் வீடுகளிலும் காணப்படும் 150 வருட பழமை வாய்ந்த குஜராத்தின் பாரம்பரிய ம்யூரல் ஓவியங்களுக்காகவும் கேதா புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஓவியங்களில் மதச் சார்பற்ற மற்றும் சமயஞ்சார்ந்த கருக்களுடன் இருக்கும். இதில் மனிதன் மற்றும் மிருகங்களின் படத்தையும் காணலாம்.

Please Wait while comments are loading...