Search
 • Follow NativePlanet
Share

காந்திநகர்- குஜராத்தின் தலைநகரம்!

16

சபர்மதி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள காந்திநகர் குஜராத்தின் புதிய தலைநகராகும். சுதந்திரத்திற்கு பின்னர் 1960 ம் ஆண்டு பழைய பாம்பே மாகாணம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தாக பிரிக்கப்பட்ட போது காந்திநகர் குஜராத்தின் புதிய தலைநகராக தேர்வு செய்யப்பட்டது.

காந்திநகர் ஒழுங்காக திட்டமிடப்படு நன்கு கட்டப்பட்ட நகரம் ஆகும். இங்கு சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் அனைத்து துறைகளுக்கான இடங்களும் திட்டமிட்டு உருவாக்கபட்டுள்ளன.

நன்றாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட இந்த நகரம் புகழ் பெற்ற இரண்டு கட்டடக் கலை நிபுணரான ஹச் கே மெவாடா மற்றும் பிரகாஷ் எம் ஆப்தே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. சண்டிகாருக்கு அடுத்தபடியாக காந்திநகர்தான் இந்தியாவில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டஇரண்டாவது சிறந்த நகரம் ஆகும்.

வரலாறு

இன்றைய காந்திநகர் அமைந்துள்ள இடம் 13 ஆம் நூற்றாண்டில் பெத்ஹஸிங் அரசருடைய ஆட்சியின் கீழ் இருந்தது. அப்பொழுது இந்த இடம் பீதாபூர் என அழக்கப்பட்டது. குஜராத்தின் தலைநகரான காந்திநகர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

நிலவியல்

அகமதாபாத்தில் இருந்து 27 கீ. மீ தொலைவில் அமைந்துள்ள காந்தி நகர், குஜராத்தின் வட-கிழக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்கு அருகில் சமர்பதி ஆறு ஓடுகிறது. ஆனால் கடும் கோடை காலங்களில் சமர்பதி நதியானது சுருங்கி ஓடை போல் மாறி விடுகிறது.

காலநிலை

காந்திநகரில் பொதுவாக வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலையே காணப்படுகிறது. காந்தி நகரின் காலநிலை கோடை, மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

காந்திநகருக்கு தென் மேற்கு பருவ மழை போதுமான மழையை கொண்டு வருகிறது. இங்கு குளிர்காலம் ஒப்பீட்டளவில் மிதமாக உள்ளது.

மக்கள் வகைப்பாடு

காந்திநகரில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் இந்துக்கள். ஆனால், அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் வேலை தேடி இந்த நகரருக்கு குடிபெயர்ந்த பின்னர், காந்திநகரில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். ஒரு மாநகருக்கான தகுதியுடைய காந்திநகர் அனைத்து தரப்பு மக்களையும் இனிதே வரவேற்கிறது.

காந்திநகரை எவ்வாறு அடைவது?

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் உள்நாட்டு, மற்றும் சர்வதேச பயணிகள் காந்திநகர் செல்வதற்கான வான்வழி அணுகலை வழங்குகிறது.

காந்திநகர் போக்குவரத்தில் மிக முக்கிய அம்சமாக விரைவு போக்குவரத்து பேருந்து அமைப்பு மற்றும் வரவிருக்கும் காந்திநகர் மெட்ரோ திட்டம் விளங்குகிறது. மேலும் காந்திநகரில் உள்ளூர் பேருந்து சேவை VTCOS ஆல் இயக்கப்படுகிறது.

பெரும்பாலான உள்ளூர் பேருந்துகள் சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கப்படுகின்றன. காந்தி நகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக மும்பையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

காந்தி நகருக்கு அருகில் அகமதாபாத் ரயில் நிலையம் உள்ளது. அகமதாபாத்தில் உள்ள ரயில் நிலையம் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுடன் ரயில் சேவை மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமான இடங்கள்

மகாத்மா மந்திர், அக்ஷர்தாம் கோவில், இன்ட்ரோடா டைனோசர்கள் மற்றும் புதைபடிவ பார்க், சரிதா உதயன் போன்றவை காந்திநகரில் பார்க்க வேண்டிய சில முக்கியமான இடங்கள் ஆகும்.

மகாத்மா மந்திர் என்பது கன்வென்ஷன் சென்டர் ஆகும். இங்கு பாபுஜி வாழ்க்கையைப் பற்றிய அனைத்துவிதமான இலக்கியங்கள் மற்றும் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் கலை அரங்கம், பிரார்த்தனை மண்டபம், தியானம் அறை மற்றும் ஒரு பெரிய சுழலும் சக்கரம் உள்ளது. அடலாஜ் படிக் கிணறு மற்றொமொரு பிரபலமான சுற்றுலா இடமாகும்.

இது காந்திநகரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் ஐந்து மாடி அமைப்பை கொண்ட இந்தக் கிணற்றின் சுவர்களில் ஜெயின் மற்றும் இந்து மத புராணங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் தெய்வங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மற்றொரு சுவாரசியமான சுற்றுலாத்தளம் இந்திய ஜுராசிக் பார்க் என கருதப்படும் இன்ட்ரோடா டைனோசர்கள் மற்றும் புதைபடிவ பூங்கா ஆகும். இது உலகின் உள்ள மிகப் பெரிய டைனோசர் முட்டைகள் குஞ்சுபொரிப்பகங்களில் இரண்டாவதாகக் கருதப்படுகிறது. இந்த பூங்கா பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட பகுதிகள் மான் பூங்கா, பறவை பூங்கா, மற்றும் பாம்பு பூங்காக்களாக செயல்படுகிறது. மேலும் இந்தப் பூங்காவில் மிகப் பெரிய கடல்வாழ் பாலூட்டி இனங்களின் எழும்புக்கூடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காட்டு விலங்குகளான ஊர்வன,நீலான், நீண்டவால் குரங்கு, மற்றும் மயில்கள் போன்றவை இந்த பூங்காவில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இந்த பூங்கா குஜராத் சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.

காந்திநகர் சிறப்பு

காந்திநகர் வானிலை

சிறந்த காலநிலை காந்திநகர்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது காந்திநகர்

 • சாலை வழியாக
  அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் போன்ற அருகிலுள்ள இடங்களில் இருந்து காந்திநகருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  காந்திநகரின் க்ஹிதோயார் ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. காந்திநகருக்கு, அகமதாபாத், ராஜ்கோட், ஓக்கா, காந்திதாம், வதோதரா, சூரத், ஜாம்நகர் மற்றும் சோம்நாத் போன்ற இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. மும்பை, நாக்பூர், போபால், உஜ்ஜைனி, பிகானீர் மற்றும் கொச்சி போன்ற நாட்டின் பிற முக்கிய இடங்களில் இருந்தும் காந்திநகருக்கு ரயில்கள் கிடைக்கின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் காந்திநகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் நாட்டின் பிற முக்கிய விமான நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இங்கிருந்து சிட்னி, சிங்கப்பூர், அபுதாபி, துபாய், பிராங்பேர்ட், ஷாங்காய் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட சர்வதேச இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Jun,Sun
Return On
14 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
13 Jun,Sun
Check Out
14 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
13 Jun,Sun
Return On
14 Jun,Mon