Search
  • Follow NativePlanet
Share

பாலன்பூர் - அரசர்கள் காலத்துக்கு ஒரு உலா!

17

பனஸ்கன்தா மாவட்டத்தின் தலைநகரான பாலன்பூர், பண்டைய காலத்தில் ப்ரஹலாதன் என்கிற அரசரால் தோற்றுவிக்கப்பட்டு, பரமரா ராஜ்புத்ர பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது இதை லோஹனி ஆப்கானியர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட சுதேச ராஜ்ஜியமாக ஆண்டு வந்தார்கள். அவர்களுடைய ஆட்சியின் கீழ் பாலன்பூர் புகழ்பெற்று விளங்கியது.

அன்றைய பாலன்பூர் ராஜ்ஜியம் என்பது இன்றைய குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும் மற்றொரு பகுதியில் சபர்மதி ஆறும் அமைந்துள்ளன.

இந்த நகரத்தில் ஏழு நுழைவாயில்களை உடைய கோட்டை ஒன்று உள்ளது. அது தற்பொழுது கிட்டத்தட்ட சிதிலமடைந்து பாழடைந்து விட்டது. சிம்லா கேட், தில்லி கேட், மீரா கேட் மற்றும் காத்ஹம்மன் கேட்  போன்றவை அந்த ஏழு வாயில்களில் மிக முக்கியமானவை.

கீர்த்திகும்ப், ஜோர்வார் அரண்மனை, பல்ராம் அரண்மனை போன்ற வரலாற்று நினைவு சின்னங்கள் பாலன்பூரின் கடந்த கால பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தை சுற்றிலும்  இந்து மற்றும் சமண மதத்தைச் சேர்ந்த பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக ப்ரஹலாத அரசரால் கட்டப்பட்ட பல்லவிய பரஸ்வன்த் அல்லது மோட்டு  டிரேஸர் மற்றும் நானு டிரேஸர் போன்றவை பாலன்பூரின் புகழ்பெற்ற சமண மதக் கோவில்களாகும்.

கீர்த்திகும்ப் அருகே அமைந்துள்ள படாலேஷ்வர் மகாதேவ் கோவில் மற்றும் மோடா ராம்ஜி மந்திர் போன்றவை புகழ்பெற்ற இந்துக் கோவில்கள் ஆகும்.

பாலன்பூருக்கு அருகில் உள்ள அம்பாஜி கோவில், கேதார்நாத் மகாதேவ் கோவில் மற்றும் பல்ராம் மகாதேவ் கோவில் போன்ற பல இந்து மதக் கோவில்களுக்கு பயணிகள் சென்று வரலாம்.

பாலன்பூர் சிறப்பு

பாலன்பூர் வானிலை

சிறந்த காலநிலை பாலன்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பாலன்பூர்

  • சாலை வழியாக
    மாநில நெடுஞ்சாலை 712 மற்றும் SH 132 ஆகியவை பாலன்பூரின் வழியே செல்கின்றன. இந்த மாநில நெடுங்சாலைகள் பாலன்பூரை குஜராத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. SH 41 பாலன்பூரை அகமதாபாத் நகரத்துடன் இணைக்கிறது. மேலும் ராஜஸ்தானின் பீவாரை குஜராத்தின் ராஜ்னாபூருடன் இணைக்கும் NH 14 சாலை பாலன்பூர் வழியே செல்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலை பாலன்பூரை சிரோஹி, பாலி மற்றும் அபு ரோடு போன்றவற்றுடன் இணைக்கிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பாலன்பூர் ரயில் நிலையம் மேற்கு இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பு நேரடியாக பெங்களூர், மைசூர், சென்னை, திருவனந்தபுரம், தில்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஜோத்பூர், ஜம்மு, முஸாபர்பூர், டேராடூன் மற்றும் பரேலி போன்ற பல்வேறு நகரங்களுடன் அகலப்பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரம் குஜராத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பாலன்பூருக்கு அருகிலுள்ள விமான நிலையம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ஆகும். இது பாலன்பூரில் இருந்து சுமார் 135 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri