கிர் தேசிய பூங்கா - அற்புத உணர்வை ஏற்படுத்தும் காட்டுப்பயணம்!

கிர்னார் காட்டுக்கு அருகில் இருக்கிறது கிர் தேசிய பூங்கா. கிர்னார் மலைக்கு செல்லும் போது கரி காட்டினையும் சந்திப்பாக நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்ட காடாகவும் வன விலங்கின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இங்கே மட்டும் தான் ஆசிய சிங்கங்களை காணலாம். அறிய வகை விலங்கினம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருவதால் ஆசியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

சுற்றுப்புறச் சூழல் அமைப்பு இங்கே பலவகைப்பட்டதாக திகழ்கிறது. ஹிரன், ஷெட்ருஞ்சி, டடர்டி, ஷின்கோடா, மச்சுன்றி, கோதாவரி மற்றும் ரவல் ஆகிய ஏழு நதிகள் இந்த காட்டில் ஓடுவதால், இதன் வளத்திற்கும் குறை இல்லை.

இங்கே ஆசிய சிங்கங்கள், காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள், நரிகள், புனுகுகள், இந்திய கீரிப்பிள்ளைகள் மற்றும் பாலைவன பூனைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். மானிட்டர் பல்லிகள், மார்ஷ் முதலைகள், இந்திய ஸ்டார் ஆமைகள் போன்ற அறிய வகை ஊர்வனதும் இங்கே உள்ளன. ஆசிய சிங்கங்களின் இனவிருத்திக்காக சிறப்பு மறுவாழ்வு நிகழ்ச்சித்திட்டமும் இங்கே மேற்கொள்ளப்படுகிறது.

Please Wait while comments are loading...