குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்கா தான் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் என்று அறியப்பட்டாலும், இங்கே வேறு சில விலங்குகளும் வாழ்கின்றன. காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள் போன்றவைகள் அவற்றில் சில.
இங்கே பாலைவன பூனைகள் மற்றும் புள்ளிகள் நிறைந்த அறிய வகை பூனைகள் வாழ்ந்தாலும் அவைகளை அவ்வளவு சுலபத்தில் காண முடியாது. ரசெல்ஸ் வைபெர்ஸ், சா-ஸ்கேல்ட் வைபெர்ஸ் மற்றும் க்ரைட்ஸ் போன்ற வகையான பாம்புகளை இங்கே காணலாம்.
இங்கே அதிக அளவில் மார்ஷ் முதலைகள், ஸ்டார் ஆமைகள், லேசான ஓடுகளை கொண்ட ஆமைகள், மானிட்டர் பல்லிகள் மற்றும் இந்திய மலை பாம்புகளும் உள்ளன.