Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிர் தேசிய பூங்கா » வானிலை

கிர் தேசிய பூங்கா வானிலை

கோடைகாலம்

கோடைக்காலம் இங்கே மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும்.கோடைக்காலம் இங்கே தாங்க முடியாத வெப்பத்தை அளிக்கும். இந்த நேரத்தில் அதிகப்பட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும். ஏப்ரல் மற்றும் மே தான் இங்கே உச்ச சீசன் காலம்.

மழைக்காலம்

மழைக்காலம் இங்கே ஜூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் முடிவடையும். இந்த நேரத்தில் இங்கு அதிக அளவிலான மழை பெய்யக் கூடும். மோசமான வானிலையால் தேசிய பூங்கா ஜூன் இரண்டாம் வாரம் முதல் அக்டோபர் வரை மூடி இருக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் இங்கே நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெப்பநிலை 15 முதல் 7 டிகிரி செல்சியிஸ் வரை இருக்கும். இந்த நேரத்தில் இந்த பூங்காவிற்கு வருவதே சிறந்த காலமாக விளங்கும்.