ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை தவிர உலகத்தில் வேறு எங்கும் இனப்பெருக்கம் செய்யப்படவில்லை. இந்த சிங்கங்களை ஜுனகத்தின் நவாப் தான் பாதுகாக்க ஆரம்பித்தார் என்று நம்பப்படுகிறது.
இவர் பாதுகாப்பை ஆரம்பித்த போது 13 சிங்கங்கள் இருந்தது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு பின் கிடைத்த ஆவணத்தின் படி இந்த கணக்கு மாறியிருக்கிறது. இந்த காட்டின் இயற்கை வசிப்பிடம் மற்றும் சுற்றுச் சூழலும் இந்த சிங்கங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது.
இந்த காட்டின் பல பகுதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுவிட்டதால், இந்த பெரிய இந்திய பூனைகள் அழியும் அபாயத்தை அடைந்துள்ளன. மிருகங்களை பார்க்க விரும்புபவர்கள் இங்கே வந்து இவ்வகை அறிய சிங்கங்களை கண்டு ரசிக்கலாம்.