Search
 • Follow NativePlanet
Share

ஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்!

36

ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின் உபயத்தால் கிடைத்தது. இந்த உபர்கோட் கோட்டையானது கி.மு. 320-ம் ஆண்டில் சந்திரகுப்த மெளரியரால் கட்டப்பட்டது. ஜூனாகத் என்கிற வார்த்தைக்கு "பழைய கோட்டை" என்று பொருள். மேலும் அதற்கு நகரின் மையத்தில் உள்ள முக்கியமான  கோட்டை என்றும்  பொருள் கொள்ளலாம்.

வரலாறு

ஜூனாகத்தின் வரலாறு மிகப் பழமையானது. இந்த நகரம் சந்திரகுப்த மெளரியர் மற்றும் அசோகருடைய பேரரசின்  ஒரு பகுதியாக இருந்தது. இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் 1 ஆட்சியைச் சேர்ந்த கல்வெட்டுகளை நாம்  காணலாம்.

முகமது பகதூர் ஹாஞ்ஜி 1 ஆட்சியின் பொழுது தற்பொழுது உள்ள  ஜூனாகத் நகரம் நிறுவப்பட்டது. அவர் பாபி வம்சத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

அவருடைய வம்சத்தவர்கள் இந்த பகுதியை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜுனாகத் ஒரு சுதேசி சமஸ்தானமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினையின் பொழுது  ஜூனாகத் இந்தியாவுடன்  இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

மதத் தொடர்புகள்

சமணம் மதம், இந்து மதம், புத்த மதம், மற்றும் இஸ்லாமியம் உட்பட  அனைத்து மதங்களும் இந்த நகரத்தில் தங்களுடைய முத்திரைகளை பதித்துச் சென்றுள்ளன. இங்கு கிமு 500 க்கும் முற்பட்ட கடினமான பாறைகளில் குடையப்பட்ட புத்த குகைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த குகைகளின் சுவர்களில் கல் சிற்பங்கள் மற்றும் மலர் வேலைப்பாடுகளை நாம் இன்றும் காணலாம். அசோகரின் 33 கல்வெட்டு பிரகடனங்களில் சுமார் 14 பிரகடனங்கள் உபர்கோட் பகுதிகளில் காணப்படுகின்றன.

புத்த மதத்தை தவிர்த்து ஜூனாகத் நகரம் இந்து மற்றும் சமண மதங்களில் ஒரு முக்கியமான இடமாக திகழ்கிறது. இந்த நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது. அந்தச் சிகரம் இந்துக்கள் மற்றும் சமணர்களுக்கு ஒரு புனிதமான இடமாகும்.

இந்தச் சிகரத்தை அடைய சுமார் 9999 படிகளை உடைய பாதை மலைகள் மற்றும் கோவில்கள் வழியே செல்கிறது. அந்த மலைப்பாதையானது வானத்தை தொடுவதுபோல் தெரிவதால் அதிலிரிந்து நாம் காணும் காட்சியானது என்றும் நம் மனதை விட்டு விலகாது.

நிலவியல்

ஜூனாகத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அரபிக்கடலும், வடக்கு பகுதியில் போர்பந்தரும், கிழக்கில் அம்ரேலியும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஸோன்ரக்ஹ்  மற்றும் கல்ஓ என்கிற இரண்டு ஆறுகள்  ஜுனாகத் பகுதியில் பாய்கின்றன.

நார்சிங்க் மேத்தா சரோவர், தாமோதர்ஜி, மற்றும் சுதர்ஷன் லேக் போன்றவை இந்த நகரத்தில் உள்ல சில முக்கிய  ஏரிகள் ஆகும். இங்கு ஸர்க்ஹெஸ்வர் மற்றும் மாதவ்பூர் கடற்கரை மிக முக்கியமான கடற்கரைகளாக விளங்குகின்றன.

முக்கியமான சுற்றுலா இடங்கள்

நவ்கான் குவொ மற்றும் ஆதி கடி வாவ் ஆகிய இரண்டும் இந்தப் பகுதியில் உள்ள மிக முக்கியமான இரட்டை படிக்கிணறுகள் ஆகும். இவைகள் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறுகள் அல்ல.

இவைகள் கடினமான பாறைகளை குடைந்து சுமார் 170 அடி ஆழத்திற்கு கீழே உள்ள தண்ணீரை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட படிக் கிணறுகள் ஆகும்.  

எஞ்சியிருக்கும் ஆசியச் சிங்களுக்கான ஒரே சரணாலயமான கிர் தேசிய பூங்கா குஜராத்தின் அடையாளமாக அறியப்படுகிறது. கிர் சரணாலயத்தை தவிர்த்து இங்குள்ள பானியா வனவிலங்கு சரணாலயம் மற்றும் மிடியாலா வனவிலங்கு சரணாலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

அசோகரின் பிரகடனங்கள் போன்ற வரலாற்று இடங்கள், ஜமா மஸ்ஜித் அல்லது புத்த மதக் குகைகள்  போன்றவை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன.

அனைத்து விளம்பரங்களும் ஜுனாகத் மற்றும் கிர் தேசிய பூங்காவை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. ஜூனாகத் எப்பொழுதும் பயணிகளை குஜராத்தை நோக்கி ஈர்த்து வந்துள்ளது. இனிமேலும் அது தொடரும்.

காலநிலை

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வறண்ட வானிலையின் தாக்கம் இந்தப் பகுதியிலும் எதிரொலிக்கிறது. இங்கு நிலவும் வானிலையில் அரபிக்கடல் மற்றும் காம்பே வளைகுடாவின் பாதிப்பு காணப்படுகிறது.

அதன் காரணமாக  கோடை காலத்தில் மிகவும் சூடான மற்றும் வறண்ட வானிலையும், குளிர்காலத்தில் கடுமையான குளிரும் நிலவுகின்றன.

கா

ஜூனாகத் சிறப்பு

ஜூனாகத் வானிலை

சிறந்த காலநிலை ஜூனாகத்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ஜூனாகத்

 • சாலை வழியாக
  ஜுனாகத்திற்கு குஜராத்தின் ராஜ்கோட் போன்ற நகரங்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து வசதிகள் உனா, அகமதாபாத், ஜாம்நகர் மற்றும் வெராவல் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  ஜுனாகத்தில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையம் மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  ஜுனாகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாக 104 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ராஜ்கோட் விமான நிலையம் அறியப்படுகிறது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jul,Fri
Return On
02 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
01 Jul,Fri
Check Out
02 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
01 Jul,Fri
Return On
02 Jul,Sat