Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜூனாகத் » ஈர்க்கும் இடங்கள் » ஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ

ஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ, ஜூனாகத்

36

ஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ ஆகிய இரண்டும் ஜுனாகத்தில் அமைந்துள்ள இரட்டை படிக் கிணறுகள் ஆகும். மற்ற படிக் கிணறுகள் போலல்லாமல், இவை இரண்டும் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டவையாகும். இந்த கிணறுகளை கட்டுவதற்காக வேறு பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை.

ஆதி கடி வாவ்

ஆதி கடி வாவ் என்பது சுமார்  9 அடுக்குகளை கொண்ட ஒரு ஆழமான கிணறு ஆகும். இது கி.பி 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கிணற்றிற்கு இந்த பெயர் கிடைத்தற்கு பின்னர் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

இந்த பகுதியை ஆண்ட  அரசன் கிணறு தோண்டுவதற்கு உத்தரவிட்டான். மிகவும் ஆழமாக தோண்டிய பின்னரும்  தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பொழுது அரச பூசாரி இரண்டு திருமணமாகாத பெண்களை பலி கொடுத்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தார்.

அவரின் யோசனையின் படி ஆதி மற்றும் கடி என்கிற இரண்டு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்டார்கள்.  பூசாரி கணித்தது போல், அந்த இரண்டு பெண்களின் பலிக்கு பின்னர் தண்ணீர் கிடைத்தது.

மற்றொரு கதையின் படி  ஆதி மற்றும் கடி ஆகிய இருவரும் அரண்மனைப் பணியாளர்கள். அவர்கள் இருவரும் இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் சுமந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என நம்பப்படுகிறது.

இந்த இடத்திற்கு வருகை தரும் மக்கள் அவர்களின் நினைவாக அருகில் உள்ள மரத்தில் துணி மற்றும் வளையல்கள் கட்டிவிட்டுச் செல்கின்றனர்.

நவ்கான் குவொ

இந்தக் கிணறு கி.பி 1026 அல்லது அதற்கு முன்போ கட்டப்பட்ட கிணறு ஆகும். சுமார் 52 மீ ஆழமுள்ள இந்த கிணறை அடைவதற்கு சுழல் படிகள் உள்ளன. இது படிக்கிணற்றிற்கான ஒரு அசாதாரண அமைப்பாகும்.

இந்த படி கிணற்றின் ஒரு பகுதி வரை மென்மையான கற்கள் கொண்டும் மற்றொரு பகுதி கடுமையான கற்களை கொண்டும் வழக்கமான படிக்கிணறு போன்று கட்டபட்டுள்ளது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed