பிகானேர் நகரத்திலுள்ள லால்கர் அரண்மனைக்கு அருகில் இந்த கங்கா கோல்டன் ஜூபிளி மியூசியம் அமைந்துள்ளது. 1937ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகிறது.
இங்கு பலவிதமான சுடுமண் கலைப்பொருட்கள், போர்க்கருவிகள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் நாணயங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புராதன ஹரப்பா நாகரிகத்தைச்சேர்ந்த அரும்பொருட்கள் மற்றும் குப்தர், குஷாணர் காலத்திய கலைப்பொருட்கள் ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.மஹாராஜா கங்கா சிங் மெமோரியல், உள்ளூர் கலை மற்றும் கைவினைப்பொருட்கள், வரலாறு, சிற்பங்கள், சுடுமண் மற்றும் உலோகப்பொருட்கள், போர்க்கருவிகள், குறு ஓவியங்கள் மற்றும் நாட்டுப்புறக்கலை போன்ற பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications