ராயல் செனடாப்ஸ் என்றழைக்கப்படும் இந்த ராஜவம்ச நினைவு மண்டபங்கள் பிகானேரிலிருந்து 8கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. முக்கிய சுற்றுலா அம்சங்களாக கருதப்படும் இவை பிகானேர் ராஜ வம்சத்தினரின் நினைவுச் சின்னங்கள் அல்லது சமாதி மாடங்கள் ஆகும்.
சிவப்புக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடங்களின் வடிவமைப்புகள் ஃபதேபூர் சிக்ரி ஸ்தலத்திலுள்ள மாட வடிவமைப்புகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சூரஜ் சிங் மன்னரின் நினைவு மாடம் மிக அற்புதமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. வெள்ளை பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இதன் உட்புறக்கூரையை ராஜபுதன ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.



Click it and Unblock the Notifications