Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிஷ்ணுபூர் » ஈர்க்கும் இடங்கள் » லோட்டக் ஏரி

லோட்டக் ஏரி, பிஷ்ணுபூர்

15

கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.

இந்த இடத்திற்கு, வாடகைக்கார்களில் அல்லது பேருந்துகள் மூலமாக வரலாம். லோட்டாக் ஏரியின் தென்பகுதியில், உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்காவான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா அமைந்துள்ளது.

உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா என்பது இதன் தனிச்சிறப்பு வாய்ந்த பெருமையாகும். இங்குள்ள மக்களின் மொழியில் பும்டிக்கள் என்று அழைக்கப்படும் மிதக்கும் தீவுகள் இந்த ஏரி எங்கும் நிறைந்துள்ளன. இவற்றில் இங்குள்ள மீனவர்கள் வசித்துவருகிறார்கள். சில பும்டிக்கள், மீன் வளர்ப்பதற்கெனவே செயற்கையாக உருவாக்கப்பட்டவை.

லோட்டக் ஏரிப்பகுதிக்கு வந்துவிட்டு, செந்திரா தீவினைக் காணாமல் வந்துவிட்டால் உங்கள் பயனம் நிறைவு பெற்றதாக இராது. லோட்டக் ஏரியில் உள்ள செந்திரா தீவானது ஒரு சிறப்பான சிற்றுலாத்தலமாகும்.

சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து தங்கிச் செல்வதை மிகவும் விரும்புகிறார்கள். இத்தீவில் படகு சவாரி செய்ய வசதி உள்ளது. இங்கு உள்ள உணவகமும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

இவ்வுணவகத்திலிருந்து பார்த்தால், மிதக்கும் தீவுகள், நீல நிறத்திலுள்ள தெளிவான நீர், பத்துப் பன்னிரண்டு படகுகள் எனக் கண்ணைக்கவரும் காட்சிகளைக் கண்டு மகிழலாம். இவ்வேரியில், எண்ணற்ற இடம்பெயரும் பறவைகளும் உள்ளூர்ப்பறவைகளும் தஞ்சம் அடைந்துள்ளன.

தென்பகுதியில், இவ்வகை மான்கள் வாழ்கின்றன. பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், தற்போது சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. 

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களுள், இப்பூங்காவும் ஒன்று. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவினைச்சுற்றிலும் லோட்டக் ஏரி அமைந்து, கண்களுக்கு விருந்தாகும் காட்சியை அளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun