தௌபல் - திறந்தவெளிகளும், நெற்பயிர்களும்!

ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தௌபலில் உள்ள மற்றொரு நதியின் பெயர் இம்பால்.

தௌபல் மாநகராட்சி அதன் கிழக்கு திசையில் மணிப்பூரில் உள்ள உக்ருள் மற்றும் சண்டெல் மாநகராட்சிகளால் சூழப்பட்டுள்ளது. அதே போல் வடக்கு திசையில் சேனாபதி மாநகராட்சியால், மேற்கு திசையில் மேற்கு மற்றும் கிழக்கு இம்பால் மாநகராட்சியால், தெற்கு திசையில் சுரச்சந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாநகராட்சியால் சூழப்பட்டு அழகே உருவாய் காட்சியளிக்கிறது தௌபல் நகரம்.

தௌபல் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இடையே அமைந்துள்ள தௌபல் நகரத்துக்கென்று ஒரு தனித்துவம் வாய்ந்த அழகு உள்ளது. பந்தோய்பீ மற்றும் சிங்கா லைரென்பி கோவில்கள், டாம்ஜிங் சிங் மற்றும் மணிப்பூர் சாஹித்ய சமிதி போன்ற பல சுற்றுலாத் தலங்களை இந்த நகரத்திலும் அதன் மாநகராட்சியிலும் காணலாம்.

மேலும் இந்த நகரத்தில் உள்ள பல சந்தைகளில் காணப்படும் கடைகளுக்கும் சென்று மகிழலாம். நினைவுப் பொருட்களிலிருந்து கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் வரை இங்கே கிடைக்கும்.

தௌபல் நகர்ப்புற எல்லையில் பல திறந்த வெளி நிலங்கள் உள்ளன. உல்லாசப் பயணங்கள் செல்ல இது சிறந்த இடமாக விளங்குகிறது. மலை மீது ஏறுதலும் இயற்கைச் சூழலில் நடை பயணம் மேற்கொள்வதும் இந்த இடத்தில் புகழ் பெற்ற பொழுது போக்குகளாகும்.

இந்த மாநகராட்சியில் பல நதிகளும் ஏரிகளும் உள்ளதால் வெளிப்புறத்தில் விளையாட இந்த இடம் தோதாக இருக்கும். இந்த நகரத்தின் பல இடங்களில் வளமான நெல் விவசாய நிலங்களை காணலாம். இவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருக்கும்.

அடிப்படையில் தௌபல் ஒரு விவசாய மாநகராட்சியாகும். இங்கே அரிசி, கடுகு, புண்ணாக்கு, உருளைக்கிழங்கு, பழங்கள் மற்றும் சில காய்களும் பயிரிடப்படுகிறது. விவசாயம் போக கால்நடை பண்ணை மற்றும் கச்சாப்பட்டு தயாரிப்புகளிலும் இந்த ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஊரின் வளர்ச்சி, உலகித்திற்கு முன் இதற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. இன்று இந்த நகரத்தில் பல வகையான பாரம்பரியத்தின் கலவையையும் நவீன நாகரீகத்தையும் காணலாம்.

தௌபல் செல்வதற்கு சரியான நேரம்

சுற்றுலாப் பயணிகள் மழைக்காலத்திற்கு பின் தௌபல் வரலாம். மழைக்காலம் முடிவின் போது இங்கு பயணிப்பதே உகுந்த நேரமாக இருக்கும்.

தௌபலை அடைவது எப்படி?

தௌபல் வர விரும்பும் பயணிகள் விமானம், ரயில் மற்றும் தரை வழியாகும் வரலாம்.

Please Wait while comments are loading...