கோஹிமா - கீவ்ஹி மலர்களின் இருப்பிடம்!

8

வட கிழக்கு இந்தியாவின் கண்கவரும் கவின்மிகு இடங்களில் ஒன்றாக நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா உள்ளது. கைபடாத அழகை கொண்டுள்ள இந்த நகரம் காண்பவர்களை மதிமயங்கச் செய்யும் வேலையை பல தலைமுறைகளாக செய்து வருகிறது. இங்கிருக்கும் மலைகளைச் சுற்றியுள்ள கீவ்ஹி மலர்களின் பெயரால் கீவ்ஹிமா அல்லது கீவ்ஹிரா என்று இருந்த பெயரை உச்சரிக்க முடியாமல், பிரிட்டிஷார் கோஹிமா என்று பெயரை மாற்றி உச்சரித்தனர்.

ஒரு காலத்தில் நாகா பழங்குடியினரில் மிக அதிகளவில் இருந்து வந்த அங்காமி பழங்குடியினர்கள் அதிகமாக வசித்து வந்த கோஹிமாவில், இன்றளவில் நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினர்களும் மற்றும் அண்டை மாநிலங்களின் பழங்குடியினர்களும் வசித்து வருகின்றனர்.

நாகாலாந்தின் பொக்கிஷ தலைநகரம் கோஹிமா

நாகா மக்கள் வசித்து வரும் பிற பகுதிகளைப் போலவே, வரலாற்றின் பெரும்பாலான பக்கங்களில் கோஹிமாவும் தனித்தே இருந்து வந்தது. 1840-ல் இங்கு வந்த பிரிட்டிஷார் நாகா பழங்குடியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை தான் சந்திக்க நேர்ந்தது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் கோஹிமாவை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்து வந்த நாகா மலைப்பகுதிகளுக்கான நிர்வாக தலைமையிடமாக உருவாக்கினார்கள்.

1963 டிசம்பர் 1-ம் நாள் நாகாலாந்து இந்தியாவின் 16-வது மாநிலமாக உருவாக்கப்பட்ட போது, மாநிலத் தலைநகரமாக கோஹிமாவிற்கு பதவி உயர்வு கிடைத்தது!

இரண்டாம் உலகப்போரின் போது ஆக்ரோஷமாக நடைபெற்ற கோஹிமா போர் மற்றும் டென்னிஸ் மைதானப் போர் ஆகியவற்றில் முன்னேறி வந்த ஜப்பானியப் படைகளுடன், நேச நாடுகள் சார்பாக போரிட்ட வீர வரலாறு கோஹிமாவிற்கு உள்ளது.

இந்த இடத்தில் நடைபெற்ற பர்மிய போராட்டத்தின் காரணமாகவே ஜப்பானிய பேரரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு, தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாம் உலகப்போரின் போக்கையே அது மாற்றியது.

இங்கு தான் முன்னேறி வந்த ஜப்பானிய படையை, நேச நாடுகளின் படைகள் தடுத்து நிறுத்தின. இந்த போரில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டு, காமன்வெல்த் கல்லறைகள் ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கோஹிமா போர்க் கல்லறைகள், கோஹிமாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் குளிர்காய ஏற்ற கண்கவரும் பார்வையிடங்கள்

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவே இந்த நகரம் கண்கவரும் அழகை காணும் இடமெல்லாம் கடை விரித்திருக்கிறது. கூர்மையான சிகரங்கள், வானைக் கிழித்துக் கொண்டு செல்லும் மேகங்கள், மூடுபனி நிரம்பிய காற்று ஆகியவற்றைக் கொண்டு கோஹிமா சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

மாநில அரசு அருங்காட்சியகம், கோஹிமா மிருகக்காட்சி சாலை, ஜாஃபு சிகரம் ஆகியவை உலகம் முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கோஹிமாவை நோக்கி கவர்நதிழுக்கும் இடங்களாகும்.

ட்சுகோவ் பள்ளத்தாக்கு மற்றும் ட்சுலெகீ ஓடை ஆகியவை நீங்கள் கோஹிமாவில் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய பிற இடங்களாக உள்ளன.

நாட்டிலேயே மிகப்பெரிய தேவாலயமாகவும் மற்றும் அழகானதாகவும் உள்ள கோஹிமாவின் கத்தோலிக்க தேவாலயமும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகும்.

கோஹிமாவின் கலாச்சாரம், உணவுப் பழக்கம் மற்றும் மக்கள்

நாகாலாந்து மக்களில், குறிப்பாக கோஹிமாவில் வசிப்பவர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் இங்கு வருபவர்கள் உள்ளூர் உணவு வகைகளை ஒரு கை பார்க்காமல் திரும்பவும் மாட்டார்கள்.

இறைச்சி மற்றும் மீன் வகைகளை விரும்பும் கோஹிமா மக்கள் அவற்றைக் கொண்டு நாக்கிச் எச்சில் ஊறச் செய்யும் உணவு வகைகளை செய்வதில் வல்லவர்களாவர். நாகாலாந்தின் வளமான மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை கோஹிமாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் உணர முடியும்.

நாகாலாந்தின் ஒவ்வொரு பழங்குடியின மக்களும் பல்வேறு வண்ணங்களையுடைய ஈட்டிகள், டை அடிக்கப்பட்ட ஆட்டின் மயிர்கற்றைகள், பறவைகளின் இறகுகள் மற்றும் யானைகளின் பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள்.

உள்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி (Inner Line Permit - ILP)

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான சட்டத்தின் கீழ் வரும் கோஹிமாவிற்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், எளிமையான பயண ஆவணமாக கருதப்படும் உள்பகுதிக்கு செல்வதற்கான அனுமதியை பெற வேண்டியது அவசியம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

எனினும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கான அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை; ஆல், அவர்கள் வந்த 24 மணி நேரத்திற்குள்ளாக வெளிநாட்டவர்களை பதிவு செய்யும் அதிகாரியிடம் அவர்கள் செல்ல வேண்டிய மாவட்டத்தை பதிவு செய்ய வேண்டியது அவசியம். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த அனுமதி ஆவணத்தை கீழ்கண்ட இடங்களில் எளிதில் பெற முடியும் -

துணை இல்ல ஆணையர், நாகலாந்து இல்லம், புது டெல்லி

துணை இல்ல ஆணையர், நாகலாந்து இல்லம், கொல்கத்தா

உதவி இல்ல ஆணையர், நாகலாந்து இல்லம், கௌகாத்தி மற்றும் ஷில்லாங்

துணை இல்ல ஆணையர், நாகலாந்து இல்லம், திமாபூர், கோஹிமா மற்றும் மோகோக்சங்

கோஹிமா சிறப்பு

கோஹிமா வானிலை

கோஹிமா
27oC / 81oF
 • Partly cloudy
 • Wind: NW 5 km/h

சிறந்த காலநிலை கோஹிமா

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது கோஹிமா

 • சாலை வழியாக
  வட கிழக்கில் உள்ள முக்கியமான நகரங்களான கௌகாத்தி, இம்பால், ஷில்லாங் மற்றும் திமாபூர் போன்ற நகரங்களுடன் கோஹிமா நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. திமாபூருடன் கோஹிமாவை இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 39 உள்ளது. இந்த நெடுஞ்சாலை கோஹிமாவிலிருந்து 345 கிமீ தொலைவிலிருக்கும் கௌகாத்தி செல்லும் 37-வது தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைப்பதால், வட கிழக்கின் நுழைவாயிலாக இது உள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  கோஹிமாவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள திமாபூர் இரயில் நிலையம் தான் முதன்மையான இரயில் நிலையமாக உள்ளது. இந்த இரயில் நிலையம் புது டெல்லி, கௌகாத்தி, கொல்கத்தா மற்றும் நாட்டின் பிற நகரங்களுடனும் இரயில் சேவைகளை பெற்றிருக்கிறது. இந்த இரயில் நிலையத்திலிந்து சுற்றுலாப் பயணிகள் கோஹிமாவிற்கு டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளைப் பெற முடியும்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  கோஹிமாவிலிருந்து 68 கிமீ தொலைவில் இருக்கும் திமாபூர் விமான நிலையம் தான் நாகலாந்தில் இருக்கும் ஒரே விமான நிலையமாகும். கொல்கத்தா மற்றும் கௌகாத்தியிலிருந்து தினசரி விமான சேவைகள் இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து நாட்டின் பிற பாகங்களுக்கு எளிதில் செல்ல முடியும். திமாபூர் விமான நிலையத்திலிருந்து கோஹிமா செல்வதற்கு டாக்ஸிகளும் மற்றும் ஷட்டில் சர்வீஸ் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
23 Apr,Mon
Check Out
24 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Mon
Return On
24 Apr,Tue
 • Today
  Kohima
  27 OC
  81 OF
  UV Index: 13
  Partly cloudy
 • Tomorrow
  Kohima
  16 OC
  61 OF
  UV Index: 12
  Heavy rain at times
 • Day After
  Kohima
  15 OC
  59 OF
  UV Index: 13
  Patchy rain possible