Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » ட்சுகோவ் பள்ளத்தாக்கு

ட்சுகோவ் பள்ளத்தாக்கு, கோஹிமா

26

மலையேற்றம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான இடமாக இருக்கும் ட்சுகோவ் பள்ளத்தாக்கு, கோஹிமாவிலிருந்து 30 கிமீ தொலைவில் காண்பவர்களை மதி மயங்கச் செய்யும் அழகுடன் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 2483 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளின் பிரமிக்க வைக்கும் சுற்று வட்டக் காட்சிகளை காட்டும் வல்லமை பெற்ற இடமாகும்.

காட்டுப் பூக்களும், தெளிந்த நீரோடைகளும் இந்த இடத்திற்கு சொர்க்கம் போன்ற உணர்வினை தருகின்றன. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி, புத்துணர்வூட்டும் பணியை இங்கிருக்கும் மலையோடைகள் செவ்வனே செய்து வருகின்றன.

பல்வேறு வண்ணங்களில் பூத்து நிற்கும் காட்டுப் பூக்கள், மூலிகைகள் மற்றும் விலங்கினங்களால் புதுவாழ்வு பெற்று விளங்கும் வசந்த காலத்தில் ட்சுகோவ் பள்ளத்தாக்கிற்கு வருவது நல்ல அனுபவமாக இருக்கும்.

லில்லி, கான்டியம், ஈபோரியா மற்றும் ரோடோடென்ட்ரான் ஆகிய பூக்களையும் இந்நாட்களில் சுற்றிலும் காண முடியும். இந்த பள்ளத்தாக்கில் சுமார் 360 வகையான ஆர்கிட் பூக்கள் உள்ளன.

மேலும், குளிர்காலத்தில் மிகுந்த குளிருடன் குளிர் பாலைவனமாக காணப்படும் இந்த இடத்தை குளிர்காலத்திலேயே கண வருவது நல்ல அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue