ஜாப்ஃபு சிகரம் மற்றும் புலேபாட்ஸே சிகரம் ஆகிய இரண்டும் கோஹிமாவில் உள்ள புகழ் பெற்ற சிகரங்களாகும். இவற்றில் மிகவும் பிரபலமானதாக விளங்கும் ஜாப்ஃபு சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 3048 மீ உயரத்தில் இருந்து கொண்டு கோஹிமா நகரத்தை பறவைகளின் கண் கொண்டு பார்க்க வைக்கும் சிறப்பு பெற்ற இடமாகும்.
15 கிமீ நீளத்திற்கு இருக்கும் இந்த சிகரம் கண்கவரும் சுற்றுப்புறங்களை கொண்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, உலகத்திலேயே மிகவும் உயரமானதாக கருதப்படும் ரொடோடென்ட்ரான் மரத்தைக் இந்த சிகரம் கொண்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த சிகரத்திற்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற பருவமாக குளிர்காலம் உள்ளது. அந்நாட்களில் ப்ளைத் டிராகோபான் மற்றும் ஹார்ன்பில் பறவைகளையும் உங்களால் காண முடியும்.
கோஹிமாவிற்கு வெளியில் ஜோட்சோமா புறநகர் பகுதியில் உள்ள மற்றுமொரு புகழ் பெற்ற சிகரமாக புலேபாட்ஸே சிகரம் உள்ளது. மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற சிகரமாக இருக்கும் இது சாகசத்தை விரும்புபவர்களின் சொர்க்கமாகும்.
புலேபாட்ஸே சிகரத்திற்கு செல்லும் வழிப்பாதைகளில் விரவிக் கிடக்கும் தாவர மற்றும் விலங்கினங்களை நீங்கள் கண்டு ரசித்திடவும் முடியும்.