Search
  • Follow NativePlanet
Share

ஸுந்ஹிபோடோ - மலையுச்சியில் ஒரு மலைக்க வைக்கும் ஸ்தலம்!

5

நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள  `ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் `மோகோக்சுங்க்',  மாவட்டமும், மேற்கில் `ஓக்ஹா' மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன. ஸுந்ஹிபோடோ என்பது `ஸுந்ஹிபோ', மற்றும் `டோ' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். ஸுந்ஹிபோ என்பதற்கு  `பூக்கும் புதர்' என்பது பொருள். இந்த செடி வெள்ளை இலைகளுடன், கடற்பாசி போன்ற காதுகளுடன் சாறு மிகுந்து காணப்படும். அந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும்.  டோ என்பதற்கு `மலையின் மேல்' என்று பொருள். ஸுந்ஹிபோடோ என்பது ஒரு ஸூமி வார்த்தையாகும்.

மக்கள் மற்றும் கலாச்சாரம்

ஸுந்ஹிபோடோ, ஸூமி பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது.  போர் வீரர்களான ஸூமி பழங்குடியினர், தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

ஸூமி மக்கள் தங்களுடைய திருவிழாவை, ஆடம்பரமான உடை அணிந்து விரிவான பாடல்கள் மற்றும் நடனங்களை ஆடி பாடி கொண்டாடுவார்கள்.  அவர்களுடைய சம்பிரதாய போர் ஆடைகளை காண கண் கோடி வேண்டும்.

ஸூமி மக்களின் மிக முக்கியமான திருவிழாவான `டுலுனி',  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஸூமிக்களின் மற்றொரு முக்கிய திருவிழாவான `அஹுந' , அம்மக்களால்  ஸுந்ஹிபோடோவில் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஸுந்ஹிபோடோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

லுமாமி கிராமம்,  ஸுந்ஹிபோடோ மாவட்டத்தின் துணைப்பிரிவான `அகுலுடோ'வில் அமைந்துள்ளது. ஸுந்ஹிபோடோ மட்டுமே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே நகரமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். எனவே, இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.

டிஸு, டொயாங்க் மற்றும், ஸுதா போன்ற ஆறுகள் ஸுந்ஹிபோடோவின் வழியே பாய்ந்து செல்கின்றன. மேலும்,  ஸுந்ஹிபோடோ நாகாலாந்தின் ஆறாவது மிக பெரிய நகராக விளங்குகிறது. மற்றைய ஐந்து நகரங்களாவன: திமாபுர், கோஹிமா, மொகொக்சுங்க், ஒக்ஹா, மற்றும் டுஇன்சாங்க்.

ஸுந்ஹிபோடோ சிறப்பு

ஸுந்ஹிபோடோ வானிலை

சிறந்த காலநிலை ஸுந்ஹிபோடோ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸுந்ஹிபோடோ

  • சாலை வழியாக
    ஸுந்ஹிபோடோ தேசிய நெடுஞ்சாலை 61 ல் அமைந்துள்ளதால், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஸுந்ஹிபோடோ கோஹிமாவில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்திலும், மொகோக்சுங்க்கிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஸுந்ஹிபோடோவை அடைய மாநிலத்தின் அனைத்து இந்த இடங்களில் இருந்தும் நாகாலாந்து மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன. மேலும், தனியார் டாக்சிகளை முன்பதிவு செய்தும் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திமாபுர் நாகாலாந்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். ரயில் மூலம் ஸுந்ஹிபோடோவை அடைய வேண்டும் எனில், நீங்கள் திமாபுர் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து சாலை மார்கமாக ஸுந்ஹிபோடோவை அடையலாம். திமாபுர் கவுகாத்தியுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கவுகாத்திக்கு நாட்டின் பிற நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாகாலாந்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை போன்று ஸுந்ஹிபோடோவிற்கும் சொந்த விமான நிலையம் இல்லை. இந்நகருக்கு அருகில் திமாபுர் விமான நிலையம் உள்ளது. இது ஸுந்ஹிபோடோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திமாபுர் விமான நிலையம் கவுகாத்தி விமான நிலையத்துடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பிற நகரங்களுக்கும் மற்றும் பிற சர்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon