Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸுந்ஹிபோடோ » வானிலை

ஸுந்ஹிபோடோ வானிலை

நீங்கள் ஈரமான பருவத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் குளிர் கலத்தில் தக்க பாதுகப்போடு  ஸுந்ஹிபோடோ விற்கு செல்வது நல்லது.  இருப்பினும் நீங்கள் இவ்விடத்தின் ஈரப்பதத்தில் திளைக்க  வேண்டும் என்றால்  பருவ மழை காலத்தில் பருவத்தில் ஸுந்ஹிபோடோ வை பார்வையிடுவது சிறந்தது. 

கோடைகாலம்

ஸுந்ஹிபோடோவின் கோடை காலத்தில் மிதமான வெப்ப நிலையே நிலவுகிறது. இங்கு கோடை காலத்தின் பதிவு செய்யப்பட்ட அதிக பட்ச வெப்ப நிலை  22 டிகிரி செல்சியஸ் ஆகும். மேலும் இங்கு கோடை காலம் நீடித்து இருப்பதில்லை. அது ஒரு சில மதங்களுக்கு மட்டுமே நீடிக்கிறது. எனினும் கோடைகாலத்தில் மெல்லிய கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

மழைக்காலம்

ஸுந்ஹிபோடோவில் நீடித்த மழைக்காலம் நிலவுகிறது. அது சுமார் 9 மாதங்களுக்கு மேல் நீடிக்கிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 200 செ.மீ. மழையளவு பதிவு செய்யப்படுகின்றது.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மிக அதிக அளவு மழை  பொழிகிறது. இந்த நகரம் உயரமான இடத்தில் அமைந்துள்ளதே அதிக மழைப்பொழிவிற்கு காரணமாகும்.

குளிர்காலம்

ஸுந்ஹிபோடோவின் குளிர்காலங்களில் அதிக குளிர் நிலவுகிறது. இந்த காலங்களில்  வெப்பநிலை  1 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே சென்று விடும். இங்கு  டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கும் குளிர்காலம்  பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின்  போது அதிக குளிர் நிலவுகிறது.  எனவே ஸுந்ஹிபோடோ மற்றும் அதன் அண்டை பகுதிகளுக்கு குளிர்காலத்தில் சுற்றுலா செல்லும் பொழுது கம்பளி ஆடைகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.