Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புத்காம் » வானிலை

புத்காம் வானிலை

கோடை காலம் புத்காம் வருகைக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் காலநிலை நிலைமையானது இந்த நேரத்தில் மிகவும் வசதியாகவும் மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. உச்ச குளிர்மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த இடமானது பனிப்பொழிவை பெறுகிறது.

கோடைகாலம்

(மே முதல் ஜூலை வரை): புத்காம் தட்ப வெப்ப நிலை கோடை பருவத்தில் மிகவும் இதமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது மற்றும் இரவு நேர வெப்பநிலை 18 டிகிரி அளவு குறைகிறது. கோடை காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஏனெனில் வெப்ப நிலை இந்த கால கட்டத்தில் சற்று இதமாக காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை): புத்காம் மழை காலத்தின் போது மிதமான மழையை பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை): புத்காம் காலநிலை குளிர் மற்றும் குளிர்காலங்களில் மிகவும் குளிர் நிறைந்து காணப்படும். வெப்பநிலை குளிர்காலத்தில் -2 டிகிரி செல்சியஸிற்கும் கீழே செல்கிறது அதிகபட்ச வெப்பநிலை வெறும் 8 ° செல்ஸியஸாக பதிவாகும்.  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், இங்கு பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு. பார்வையாளர்கள் பனிப்பொழிவை அனுபவிக்க இந்த நேரத்தில் இங்கே வருகை தரலாம். புத்காம் வெப்பநிலை பிப்ரவரி மாதம் உயர தொடங்குகிறது.