சித் பாபா கா மந்திர், சைல்

சைல் நகரத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமான சித் பாபா கா மந்திர் ராஜ்கர் மற்றும் பாந்த்வா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங் இவ்விடத்தில் அரண்மனையை கட்ட நினைத்த போது, அவருடைய கனவில் வந்த துறவியொருவர் மாற்றாக கோவில் ஒன்றை கட்டுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு மன்னர் கட்டிய இந்த கோவில் சித் பாபா கா மந்திர் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த கோவிலைச் சுற்றியுள்ள அழகிய சுற்றுப்புறங்கள் சுற்றுலாத்தலத்திற்குரிய அந்தஸ்தை அளிக்கின்றன.

Please Wait while comments are loading...