Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல் சரணாலயம் » ஈர்க்கும் இடங்கள் » பறவைகளின் சொர்க்கம்

பறவைகளின் சொர்க்கம், சம்பல் சரணாலயம்

14

கரியல் முதலைகள், கங்கை டால்பின்கள் மற்றும் ஆல்லிகேட்டர் முதலைகளுக்கு பிரசித்தமாக சம்பல் வனப்பகுதி அறியப்பட்டாலும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இது தற்போது பிரபல்யமடைந்துள்ளது.

மத்திய விந்திய மலையிலிருந்து உருவாகி ஓடி வரும் சம்பல் ஆறு ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்ட மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மொரேனா மற்று பிந்த் மாவட்டங்கள், உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, எட்டவா மாவட்டங்கள் வழியாக பாய்ந்து இறுதியில் யமுனை நதியில் இணைந்து விடுகிறது.

சம்பல் சரணாலயம் IN122 எனும் ஒரு முக்கியமான பறவைகள் வசிப்பிடமாக அறியப்படுகிறது. இங்கு 330 வகைகளுக்கும் மேற்பட்ட வசிப்பிட பறவைகள் புகலிட பறவைகள் வசிக்கின்றன.

எனவே இந்தியாவில் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பும்  பறவைகள் சரணாலயங்களில் பட்டியலில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.

இலையுதிர்காலம் குளிர்காலங்களில் இங்கு பல்வதமான பறவைகளை பார்த்து ரசிக்கலாம். இக்காலத்தில் வசிப்பிட பறவைகளை மட்டுமல்லாது இமயமலை மற்றும் ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து பறவைகளையும் பார்க்க முடியுமென்பது ஒரு விசேஷம்.

இந்திய ஸ்கிம்மர் எனப்படும் அபூர்வ பறவை வெள்ளை வல்லூறு மற்றும் இந்திய வல்லூறு, புள்ளிக்கழுகு போன்ற பறவைகளை இங்கு காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City