Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல் சரணாலயம் » ஈர்க்கும் இடங்கள் » சம்பல் சஃபாரி

சம்பல் சஃபாரி, சம்பல் சரணாலயம்

14

சம்பல் சஃபாரி எனும் இந்த காட்டுப்பயணம் உங்களுக்கு சம்பல் சரணாலயத்தின் உட்பகுதியை தரிசிக்க உதவுகிறது. இந்த சரணாலயம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேஷ் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மூன்று மாநிலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

1979ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சரணாலயம் 400 கி.மீ நீளத்துக்கு சம்பல் ஆற்றை உள்ளடக்கியதாக அதைச்சுற்றி 1235 ச.கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கிறது.

இந்த சம்பல் சரணாலயம் சம்பல் கரியல் காட்டுயிர் சரணாலயம் என்றும் அழிக்கப்படுகிறது. அருகி வரும் கரியல் முதலைகளை காப்பதற்காக இந்த அடையாள விசேஷம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இயற்கை தூய்மை கெடாமல் ஓடும் ஆறுகளில் மிக முக்கியமானது இந்த சம்பல் ஆறாகும். இது ரந்திதேவர் எனும் அரசர் ஆயிரக்கணக்கான பசுக்களை பலி கொடுத்தபோது பெருகிய ரத்தத்தினால் உருவானதாக சொல்லப்படுகிறது.

எனவே இது போன்ற கதைகள் இப்பகுதிக்கு அதிக மக்கள் விஜயம் செய்யாமல் தடுத்து இந்த ஆற்றின் தூய்மையை காத்துவிட்டன என்றும் சொல்லலாம். பறவைகள் மற்றும் முதலைகள் இந்த ஆற்றுப்பகுதியில் இயற்கை செழிப்பின் மத்தியில் வாழ்ந்து வருகின்றன.

இந்த சரணாலயத்தில் மொத்தம் 330 வகையான இருப்பிட மற்றும் புகலிடப்பறவைகள் வசிக்கின்றன. சைபீரியா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து வருகை தரும் இடம்பெயர் பறவைகளும் இப்பிரதேசத்தில் வசிக்கும் உயிரினங்களில் அடங்குகின்றன.

ஒவ்வொரு வருடமும் இங்கு விஜயம் செய்யும் புலம்பெயர் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City