Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாந்தேரி » ஈர்க்கும் இடங்கள் » சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம்

சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம், சாந்தேரி

26

சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம், சாந்தேரியின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கும் பொருட்டாக உருவாக்கப்பட்ட இடமாகும். உண்மையில் சாந்தேரி ஒரு கலாச்சார, வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

இந்நகரம் அற்புதமான கோட்டைகள், அரண்மனைகள், பெரிய நுழைவாயில்கள் மற்றும் எண்ணற்ற நினைவுச்சின்னங்களை கொண்டுள்ள இடமாகும். இந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் வரலாற்றின் பாதையில் சாந்தேரியை ஆண்டு வந்த, பல்வேறு வம்சத்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

இவர்கள் உருவாக்கி வைத்த இந்த வளமான வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே சாந்தேரி தொல்பொருள் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக ஏப்ரல் 3, 1999-ல் திறந்து விடப்பட்டது. இந்த மியூசியத்திற்கான கலைப்பொருட்கள்—நினைவுச்சின்னங்களும், பல்வேறு வரலாற்று கட்டிடங்களும் உள்ள சாந்தேரி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், மற்றும் உள்ளூர் மக்கள் மற்றும் தனியாக வரலாற்றுப் பொருட்களை சேகரிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சாந்தேரி மற்றும் பழைய சாந்தேரியைச் சுற்றியுள்ள சிதைந்த கோவில்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை அந்த காலத்தில் நிலவி வந்த வளமான கலாச்சாரத்தை நமக்கு நினைவுபடுத்துபவையாக உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed