சாந்தேரியில் உள்ள ராஜ் மஹால் மாளிகைளில் ஒன்றாக ராணி மஹால் உள்ளது. ராஜா மஹால் மற்றும் ராணி மஹால் ஆகிய இரண்டு மாளிகைகளில் ராணி மஹால் சிறிய அளவுடையதாகும்.
நான்கு அடுக்குகளையுடைய இந்த மாளிகை ராஜா மஹாலுடன் இரகசிய வழியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாளிகைகளும் அருகருகிலேயே கட்டப்பட்டிருந்தாலும் இவற்றின் கட்டிடக்கலைகள் மிகவும் மாறுபட்டவை.
ராணி மஹாலில் புண்டேலா பாணியிலான கட்டிடக்கலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மாளிகை கட்டப்பட்ட காலம் சரியாக தெரியாமலிருந்தாலும், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இம்மாளிகையில் உள்ள அரசவை நான்கு புறமும் மூடப்பட்ட இடமாக உள்ளது. இதன் பிரகாரங்கள் விஸ்தாரமானவையாகவும், அழகிய தூண்களை கொண்டவையாகவும் உள்ளன.
இதன் சமதளப் பரப்புகளில் கட்டப்பட்டுள்ள பெவிலியன்கள் கண்காணிப்பு கோபுரங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த அரண்மனையில் சில அறிவார்ந்த கட்டிடக்கலை அம்சங்களையும் காண முடியும். உதாரணமாக, இங்கு கட்டப்பட்டிருக்கும் சில்ட் ஜன்னல்கள் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருக்கிறதேயொழிய, அழகிற்காக அல்ல.



Click it and Unblock the Notifications