கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கம் ஆகியவை சௌகோரிக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவங்களாக திகழ்கின்றன. இக்காலத்தில் சுற்றுலாவுக்கேற்ற இதமான சூழலுடன் இம்மலைவாசஸ்தலம் காட்சியளிக்கின்றது.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 25°C ஆகவும் குறைந்தபட்சம் 17°C ஆகவும் காணப்படும். சௌகோரி மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்ய இந்த கோடைக்காலம் மிக பொருத்தமாக இருக்கும்.
(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : சௌகோரி பகுதியில் மழைக்காலம் ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் இப்பகுதி கடும் மழைப்பொழிவினை பெறுகிறது.
(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : அக்டோபர் மாதம் துவங்கும் குளிர்காலம் சௌகோரி பகுதியில் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 10°C ஆகவும் குறைந்தபட்சம் 2°C ஆகவும் காணப்படுகிறது.