தத்தா மந்திர் கோயில் ரேவ்தந்தா கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் தத்தத்ரேயா கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலும் மகாராஷ்டிரிய சமூகத்தை சேர்ந்தவர்களே வழிபடுவார்கள்.
இந்தக் கோயில் எதிரிகளை கண்காணிப்பதற்காக சிவாஜி மகாராஜாவின் ஆட்சியில் கட்டப்பட்டது. இதன் முதன்மை தெய்வமான தத்தத்ரேயாவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக 5 நாட்கள் கொண்டாடப்படும்.
இந்த 5 நாட்களும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு விடுமறை அளிக்கப்படும். தத்தா மந்திர் கோயில் 1500 படிகளுடன், குன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது. இக்கோயிலிலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த சாவ்ல் நகரமும், ரேவ்தந்தாவும் தெளிவாக தெரியும்.



Click it and Unblock the Notifications