சாவ்ல் நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், அலிபாக் நகருக்கு அருகே ரேவ்தந்தா அமைந்துள்ளது. இது சிவாஜி மகாராஜாவின் காலத்தை நினைவுபடுத்தினாலும், ரேவ்தந்தா அந்த காலத்தை சேர்ந்தது அல்ல.
இந்தப் பகுதிகள் முழுமையும் கொட்டைப் பாக்கு மரத்தாலும், தென்னை மரத்தாலும் சூழப்பட்டது. அதோடு பாகுலி எனும் நறுமண மலரும் இங்கே அதிகமாக காணப்படும்.
அதுமட்டுமல்லாமல் பரந்து கிடக்கும் கரு மணலால் காண்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் விதமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரேவ்தந்தா கடற்கரையை பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications