சிக்பல்லாபூரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த முத்தெனஹள்ளி நகரம் அமைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட அறிவியல் பொறியாளரும் ஆட்சியாளருமான சர்.எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த இடமாகும்.
இவரது குடும்பத்துக்கு சொந்தமான இடம் இன்று ஒரு மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் அவரது பல நூல்களும், படைப்புகளும் புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு போக நந்தீஸ்வரா கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோயிலும் அமைந்துள்ளது. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பக்தர்களால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications