Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » வானிலை

சிக்மகளூர் வானிலை

சிக்மகளூருக்கு வருடத்தின் எந்த காலத்திலும் வருகை தரலாம். இருந்தாலும் சுற்றிப்பார்ப்பதற்கு அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் ஏற்றதாக கருதப்படுகிறது. அதே சமயம் நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா அம்சங்களை பார்ப்பதற்கு ஜூன் வரை செப்டம்பர் வரையிலான மழைக்காலம் சிறந்ததாக கருதப்படுகிறது. அச்சமயத்தில் மலையும் மலைசார்ந்த அருவிகளும் இயற்கை வனப்புடன் காட்சியளிக்கின்றன. 

கோடைகாலம்

(மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை): கோடைக்காலத்தின் சிக்மகளூர் பகுதியில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. பகலில் 350 C ஆகவும் இரவில் 320 C என்ற அளவிலும் இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் பயணிகள் கூட்டம் கூட்டமாக இப்பகுதிக்கு வருகின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டெம்பர் வரை): சிக்மகளூர் பகுதி மழைக்காலத்தில் நல்ல கணிசமான மழையை பெறுகிறது. இப்பருவத்தில் சூழல் ரம்மியமாக காணப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் இக்காலத்தில் சிக்மகளூர் வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் சிக்மகளூர் பகுதி குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 170 C ஆகவும் அதிகபட்ச வெப்பநிலையாக 200 C ஆகவும் உள்ளது. குளிர்காலத்தில் சிக்மகளூரின் பருவநிலை ஒரு அபூர்வ குளுமையுடன் விளங்குவதால் பயணிகள் இக்காலத்தில் இங்கு வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.